பதிவு செய்த நாள்
17 மார்2021
20:36

புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், நாட்டின் சில்லரை விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய காலகட்ட விற்பனையில், 93 சதவீதத்தை எட்டியிருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.
இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது:கடந்த பிப்ரவரியில், சில்லரை விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நுகர்வோர் சாதனங்கள் பிரிவிலும், துரித சேவை உணவகங்களிலும் விற்பனை அதிகரித்துள்ளது. காலணிகள், அழகுசாதன பொருட்கள், தனிநபர் ஆரோக்கிய பொருட்கள், விளையாட்டு சாதனங்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றுக்கான விற்பனை, தொடர்ந்து ஒவ்வொரு மாதமும், நீடித்த வளர்ச்சியை எட்டி வருகின்றன.
தெற்கு மற்றும் வடக்கு மாநிலங்கள் அதிக வளர்ச்சியை காட்டி வருகின்றன.கொரோனாவுக்கு பின்னர், விற்பனையாளர்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தி, டிஜிட்டல் வடிவிலான அணுகுமுறைகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் மனநிலைக்கு ஏற்ப, தங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|