பதிவு செய்த நாள்
17 மார்2021
20:38

புதுடில்லி:ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தங்களுடைய பிரீமியத்தை அதிகரிப்பதற்காக, ஏற்கனவே வழங்குவதாக சொல்லப்பட்டிருக்கும் பலன்களை மாற்ற முயற்சிக்கக் கூடாது என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,’ தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களில், காப்பீடுதாரர்களுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளில் மாற்றம் செய்யும் போது, அது பாலிசிக்கான பிரீமியத்தை அதிகரிக்க செய்யும். எனவே, காப்பீட்டு நிறுவனங்கள், தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளை மாற்றக்கூடாது என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
இது குறித்து, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிஇருப்பதாவது:பொது மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தற்போது இருக்கும் திட்டங்களில் இருக்கும் பலன்களை மாற்றியமைக்க கூடாது. அப்படி புதிய பலன்களை சேர்க்கும்போது, பிரீமியம் தொகை அதிகரிக்க கூடும்.இருப்பினும், காப்பீட்டு நிறுவனங்கள், வழிகாட்டு முறைகளில் குறிப்பிட்டுள்ளதற்கு ஏற்ப, சிறிய மாற்றங்களை செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.
கூடுதல் பலன்களை சேர்ப்பது அல்லது தற்போதிருக்கும் பலன்களை மேம்படுத்துவது எனில், பாலிசிதாரர்களின் அனுமதியுடன், அவர்களது விருப்பத்தின் பேரில் கூடுதல் சேர்க்கையாக வழங்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|