பதிவு செய்த நாள்
18 மார்2021
21:19

புதுடில்லி:‘இந்திய பொருளாதாரத்தின் மோசமான காலம் முடிந்துவிட்டது. இனி, பொருளாதார வளர்ச்சி மேல் நோக்கி மட்டுமே செல்லும்’ என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது. அரசின் நடவடிக்கைகள் காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீட்சி கண்டு வருகிறது. அரசின் தாராளமான மூலதன செலவுகள் காரணமாகவே, கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் விடுபட முடிந்தது.
இந்நிலையில், மீண்டும் பாதிப்புகள் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போதைய அதிகரிப்பு விரைவிலேயே கட்டுப்படுத்தப்பட்டு விடும் என ரிசர்வ்வங்கி கருதுகிறது.நாட்டின் சந்தையானது சீராக செயல்பட, ரிசர்வ் வங்கி தொடர்ந்து உதவும். மேலும், மத்திய – மாநில அரசுகளின் கடன் திட்டங்கள் சிரமம் ஏற்படுத்துவதாக இல்லாமல் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளவும் உதவும்.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.இருப்பினும், ‘பிட்காய்ன்’ போன்ற மெய்நிகர் நாணயங்களைப் பொறுத்த வரை, ரிசர்வ் வங்கிக்கு சில கவலைகள் இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|