பதிவு செய்த நாள்
18 மார்2021
21:25

புதுடில்லி:சீனாவை சேர்ந்த, ‘அலிபாபா’ நிறுவனத்துக்கு, அடி மேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது.
சீனாவின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான, அலிபாபா, பல்வேறு சிக்கல்களை அரசிடமிருந்து தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. அண்மையில் ஊடக முதலீடுகளில் இருந்து நிறுவனத்தை வெளியேறச் சொன்னதன் தொடர்ச்சியாக, இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற இன்டர்நெட் தேடுபொறியான, ‘யு.சி., பிரவுசர்’ சீன ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
யு.சி., பிரவுசரை, 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், சீன அரசு தொலைக்காட்சியின் நுகர்வோர் உரிமை நிகழ்ச்சியில், தகுதியற்ற நிறுவனங்களின் மருத்துவ விளம்பரங்களை உள்ளடக்கியதாக, யு.சி., பிரவுசர் இருப்பதாக விமர்சிக்கப் பட்டது. இதையடுத்து, அலிபாபா குழுமத்தின், யு.சி., பிரவுசர் நீக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடவடிக்கையை அடுத்து, சீனாவின் பிரபலமான ஹூவாவேய், சயோமி, ‘விவோ’ உள்ளிட்ட நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்களில் இருந்து, யு.சி., பிரவுசரை பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆப்பிள் போன்களில் மட்டும் பழைய நிலை நீடிக்கிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடுத்து, மன்னிப்பு கோரியுள்ள அலிபாபா, இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பிரவுசரில் மேற்பார்வை முறையை வலுப்படுத்தி, பயனர்களுக்கு உயர்தர தகவல் சேவையை, கூடுதல் தரத்துடன் வழங்குவோம் என்றும், பயனர்கள் தொடர்ந்து கண்காணித்து அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|