பதிவு செய்த நாள்
20 மார்2021
21:49
புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ‘காம்பாக்ட் ஆம்புலன்ஸ்’ வாகன தயாரிப்பில் இறங்கி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ், மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சேவைகளுக்காக, சிறிய அளவிலான, ‘மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ்’ மாடலை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கொரோனா பாதிப்புகளை சமாளிக்க உதவும் வகையில், மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்தானசேவைகளுக்காக, இந்த, மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸை அறிமுகம் செய்துள்ளது.மருத்துவ நிபுணர்களுடன் தொடர்ந்து கலந்தாலோசித்து, என்னென்ன மாதிரியான வசதிகள் தேவைப்படும் என்பதை கண்டறிந்து, அதை பூர்த்தி செய்யும் வகையில், இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இதில், ஆட்டோ லோடிங் ஸ்ட்ரெச்சர், மருந்துகள் மற்றும் சாதனங்களை எளிதாக கையாள வசதியான அமைப்புகள், மிகச் சரியாக அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவருக்கான இருக்கை உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.இந்த ஆம்புலன்ஸ், 5 இருக்கைகள் வசதியும், 800 சிசி இன்ஜின் திறனும் கொண்டது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|