பதிவு செய்த நாள்
27 மார்2021
20:09

சென்னை:ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு’ நிறுவனத்துடன் இணைந்து, ‘தினமலர்’ நாளிதழ், ‘முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி’கள் பலவற்றை நடத்தவிருப்பது வாசகர்கள் அனைவரும் அறிந்ததே.
அதன்படி, மியூச்சுவல் பண்டு முதலீட்டு விழிப்புணர்வு குறித்த முதல் ‘வெபினார்’ நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், நிதி ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும், ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின், தெற்கு மண்டல தலைவர் எஸ்.ஹரீஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.நிகழ்ச்சியை, ‘தினமலர்’ சார்பாக, பத்திரிகையாளர் ஆர்.வெங்கடேஷ் நெறியாளராக இருந்து நடத்தினார்.
இந்த முதல் நிகழ்ச்சியில், ‘மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது எப்படி; அதனால் என்னென்ன நன்மைகள்’ என்பது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.தேவைகளும், விலைவாசியும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு ஈடுகொடுத்து, நம் விருப்பங்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகள் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, மியூச்சுவல் பண்டில் செய்யப்படும் முதலீடு எவ்வளவு பாதுகாப்பானது, எளிமையானது என்பது குறித்தும் எடுத்துச் சொல்லப்பட்டது.பல நூறு வாசகர்கள், மியூச்சுவல் பண்டு முதலீட்டில் அடிப்படையான பல சந்தேகங்கள் குறித்து கேள்விகளை கேட்டிருந்தனர். அவை அனைத்துக்கும் விடை சொல்லும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|