பதிவு செய்த நாள்
27 மார்2021
20:11

புதுடில்லி:‘‘அடுத்த, 10 ஆண்டுகளில், வங்கி மட்டுமின்றி நிதிச் சேவைகள் துறை சார்ந்த பணப் பரிவர்த்தனைச் செலவு வெகுவாக குறையும்,’’ என, புதிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைவர், கே.வி.காமத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:இன்று அனைத்து துறைகளையும், நவீன தொழில்நுட்பங்கள் ஆளுகின்றன. வங்கிகளில், 20 ஆண்டு களுக்கு முன் புகுத்தத் துவங்கிய தொழில்நுட்பங்களால், அத்துறை இந்த அளவிற்கு வளர்ச்சி கண்டு உள்ளது.வங்கிச் சேவைகள் அனைத்தும் ‘டிஜிட்டல்’ மயமாகி வருகின்றன.
வங்கித் துறையில் ஏற்பட்ட மிகச் சிறந்த இந்த மாற்றம், தொழில்நுட்ப யுகத்தின் முதல் அலையாக வர்ணிக்கப்படுகிறது. அடுத்து நிதிச் சேவைகள் துறையும் தொழில் நுட்பங்களை தன்னுள் புகுத்தி விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்த, 10 ஆண்டுகளில், தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக, நிதிச் சேவைகள் துறையில் போட்டிகள் பல மடங்கு அதிகரிக்கும். இதை எதிர்மறையாக பார்க்கக் கூடாது.
இந்த வளர்ச்சி காரணமாக நிதிப் பரிவர்த்தனை செலவுகள் குறையும்.உதாரணமாக, நுண் கடன் துறையில், தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டதால், இடைத் தரகுச் செலவினம் பெருமளவு குறைந்துள்ளது. ஒருவர், மொபைல்போன் வாயிலாக, நிதிச் சேவை வலைதளத்தில் நுழைந்து, சுலபமாக கடன் பெற முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|