பதிவு செய்த நாள்
28 மார்2021
21:36

'பி.எப்.,' எனும் வருங்கால வைப்பு நிதியில், நிதியமைச்சர் கொண்டுவந்திருக்கும் திருத்தம் மிகவும் முக்கியமானது. அரசு ஊழியர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு இது. எப்படி பயன்படுத்திக்கொள்வது?
இந்தியாவிலேயே அதிக வட்டி கிடைக்கக்கூடிய ஒரே முதலீடு என்றால், அது பி.எப்., பங்களிப்பு தான். கண்ணுக்குத் தெரியாத, ஆனால், கிடுகிடுவென வளர்ந்துகொண்டிருக்கும் முதலீடு இது. ஆண்டு ஒன்றுக்கு, 8.5 சதவீத வட்டியை யார் தருவார்?
தனியாருக்கு பொருந்தாது
பலரும் தங்கள் அந்திமக் காலத்துக்கான சேமிப்பாக, பி.எப்., தொகையைத் தான் கருதுகின்றனர். இதில், பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில், 12 சதவீதமும், அதே அளவுக்குத் தொகையை நிர்வாகமும் வருங்கால வைப்பு நிதியில் செலுத்துவர்.
ஒவ்வொரு ஆண்டும், இந்தத் தொகைக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவிக்கும். மூத்த குடிமக்களே இதனால் பெரிதும் பயன்பெறுகிறார்கள் என்பதால், மத்திய அரசு, 8.5 சதவீதத்துக்குக் குறையாமல் வட்டி வழங்கி வருகிறது. வழக்கம்போல், பல குயுக்தியாளர்கள், இதனையே ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ளவும் செய்தனர்.\
கோடிக்கணக்கான தொகையை, பி.எப்., நிதியில் சேமித்து வைக்கத் தொடங்கினர். இதில் செய்யப்படும் முதலீட்டுக்கோ, ஈட்டக்கூடிய வட்டிக்கோ, அந்தத் தொகை வெளியே எடுக்கப்படும்போதோ, எங்கேயும் வரிப்பிடித்தம் கிடையாது என்ற வாய்ப்பை ஒருசிலர் பயன்படுத்திக்கொண்டனர். இங்கேதான், 2021க்கான பட்ஜெட்டை வழங்கும்போது, நிதியமைச்சர் ஒரு புதிய திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
2.5 லட்சம் ரூபாய் வரை செய்யப்படும் பி.எப்., பங்களிப்புக்கு கிடைக்கும் வட்டிக்கு, வரி கிடையாது. அதற்கு மேல் செய்யப்படும் பங்களிப்புக்கு, வரி உண்டு என்றார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, 'பைனான்ஸ் பில் 2021'ல் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, 2.5 லட்சம், 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் அர்த்தம் என்ன? நீங்கள், 5 லட்சம் ரூபாய் வரை உங்கள் பி.எப்., நிதிக்குப் பங்களிப்பு செய்யலாம். அதற்கு கிடைக்கும் வட்டிக்கு, வரி போடப்படாது. வரியும் இல்லை, கூடுதல் வட்டியும் கிடைக்கும். அரிய வாய்ப்பாக, பி.எப்., பங்களிப்பு மாறியுள்ளது. என்ன ஒரே ஒரு சிக்கல் என்றால், இது தனியார் துறையினருக்குப் பொருந்தாது என்பதுதான். சட்டத் திருத்தத்தில் ஓர் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. நிறுவன பங்களிப்பு இல்லாமல், தனிநபர் பங்களிப்பு மட்டுமே உள்ள, இடங்களில் மட்டுமே இந்த மாற்றம் பொருந்தும் என்று தெரிவிக்கிறது, சட்ட திருத்தம்.
சந்தேகம்
தனியார் துறையில், பி.எப்., நிதிக்கு நிறுவனத்தின் பங்களிப்பும் இருந்தே தீரும். அதனால், அரசுத் துறையினருக்கு அடித்தது ஜாக்பாட். அவர்கள், வழக்கமாக செய்யக்கூடிய பி.எப்., பங்களிப்பு இல்லாமல், கூடுதல் நிதி பங்களிப்பைச் செய்யமுடியும். அதன்மூலம் கிடைக்கக் கூடிய வட்டி வருவாய்க்கு வரி இல்லை. இதில் உள்ள வாய்ப்பு, அரசு பணியாளர்களோடு தனியார் துறை பணியாளர்களுக்கும் வழங்கப்படலாமே என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் பி.எப்., பங்களிப்பு என்பதே கூட, மிகவும் குறைவுதான். எதிர்காலத் தேவைக்காகச் செய்யப்படும் இத்தகைய சேமிப்பை அரசு ஊக்கப்படுத்த வேண்டும் அல்லவா?
அதேசமயம், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்தால், கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு என்பது, 'சேமிக்காதே' என்று சொல்வது போல் அல்லவா உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது. அல்லது, 8.5 சதவீத வட்டி என்பது கட்டுப்படியாகாத வட்டி. எல்லோருக்கும் அவ்வளவு கொடுக்க முடியாது என்பதாலேயே, பணியாளர்களின் பங்களிப்பைக் கட்டுப் படுத்துவதற்கான முயற்சியோ இது என்ற சந்தேகமும் எழுகிறது.
அனுமதி வேண்டும்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|