பதிவு செய்த நாள்
28 மார்2021
22:32

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, பொதுமுடக்கம் அமல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்த புதிய சூழல் கற்றுத்தந்த நிதி பாடங்களை நினைவில் கொள்வோம்.
பொதுமுடக்கம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து, பொருளாதாரம் மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், கொரோனா இரண்டாம் பாதிப்பு தொடர்பான செய்திகள்
எச்சரிக்கையாக அமைகின்றன. கொரோனா உண்டாக்கிய புதிய இயல்பு நிலை, பொருளாதாரத்தை பாதித்ததோடு, தனிநபர்களின் நலத்தையும் பாதித்தது. பணியிழப்பு மற்றும் ஊதிய குறைப்பு உள்ளிட்ட வற்றை எதிர்கொள்ள, வாழ்வியல் மாற்றங்கள் தேவைப்பட்டன. எனினும், இந்த சூழல், முக்கிய நிதி பாடங்களையும் கற்றுத் தந்துள்ளது.
அவசர கால நிதி
எதிர்பாராத நெருக்கடியை சமாளிக்க, குறைந்தபட்சம் ஆறு மாத கால அடிப்படை செலவுகளுக்கான தொகை, அவசர கால நிதியாக கையிருப்பில் இருக்க வேண்டும் என சொல்லப்படுவதன் அவசியத்தை, பொதுமுடக்கம் தெளிவாக புரிய வைத்தது.
இத்தகைய நிதியை உருவாக்கி கொள்வது முக்கியம் என்பதோடு, இந்த நிதி, ஓராண்டுக்கான அடிப்படை செலவை சமாளிக்க கூடிய அளவாக இருக்கும் வகையில் அமைவதும் நல்லது.
மேலும், கடந்த ஆண்டு நெருக்கடிக்கு மத்தியில் கைவசம் இருந்த அவசர கால நிதியை பயன்படுத்திக்கொண்டவர்கள், அதை மீண்டும் உருவாக்கி கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
அவசர கால நிதியை தேவைப்படும்போது உடனடியாக எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில், பொருத்த மான வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். அவசர கால நிதி போலவே, மருத்துவ காப்பீட்டின் அவசியத்தையும் புதிய இயல்பு நிலை புரிய வைத்தது. மருத்துவ காப்பீடு
பெறுவது மட்டும் போதாது, காப்பீடு தொகை அதிகமாக இருப்பதும் அவசியம் என்பதும் புரிய வந்துள்ளது.
அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளை கருத்தில் கொண்டு, மருத்துவ காப்பீடு தொகையும் போதுமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். அலுவலக தரப்பில் குழு காப்பீடு அளிக்கப்பட்டிருந்தாலும், தனியே காப்பீடு பெற்றிருப்பது அவசியம் என்பதையும் உணர வேண்டும்.
வட்டி குறைப்பு
பொருளாதார சிக்கலுக்கு நடுவே, பலரும் கடன் தவணைகளை சமாளிப்பதை கடினமாக உணர்ந்தனர். வீட்டுக்கடன் பெற்றிருந்தவர்கள், மாதத்தவணையை விடாமல் தொடரும் சவாலை எதிர்கொண்டனர். இதற்கு தற்காலிக நிவாரணமும் அளிக்கப்பட்டது. கடன் தவணை நெருக்கடியை எதிர்கொண்டவர்கள், வரும் காலத்தில் கடன் நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது மிகவும் குறைவாக
உள்ளது.
ஏற்கனவே கடன் பெற்றவர்கள் அதிக வட்டி விகிதம் செலுத்தி வந்தால், குறைந்த கடன்
விகிதத்திற்கு மாறுவது மாதத் தவணையை குறைக்க உதவுமா என பரிசீலிக்க வேண்டும்.சவாலான சூழலில், பலரும் செலவுகளை சமாளிக்க, கைவசம் உள்ள முதலீடுகளில் இருந்து பணம் எடுத்திருக்கலாம். எனினும், நின்று போன முதலீடுகளை தொடர்வது முக்கியம். விலக்கப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
வாழ்வியல் செலவுகளை குறைத்துக்கொள்ள முடிந்திருக்கும் சூழலை பயன்படுத்திக்கொண்டு, மிச்சமாகும் தொகையை, உரிய வகையில் முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு காலத்திற்கான சேமிப்பை சீராக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|