கொரோனா காப்பீடு பாலிசிகள் நீட்டிப்புகொரோனா காப்பீடு பாலிசிகள் நீட்டிப்பு ... மாருதி சுசூகி வர்த்தக வாகனப் பிரிவு : 92,000+ வாடிக்கையாளர்களுடன் மைல்கல் சாதனை மாருதி சுசூகி வர்த்தக வாகனப் பிரிவு : 92,000+ வாடிக்கையாளர்களுடன் மைல்கல் ... ...
வரு­மான வரி தொடர்­பாக அம­லுக்கு வரும் மாற்­றங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2021
22:37

இந்த ஆண்டு தாக்­கல் செய்­யப்­பட்ட பட்­ஜெட்­டில், தனி­ந­பர் வரு­மா­ன­வரி உச்­ச­
வ­ரம்­பில் எந்த மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை என்­றா­லும், முக்­கிய மாற்­றங்­கள்
அறி­விக்­கப்­பட்­டன. இவற்­றில் சில, நிதி­யாண்­டின் போக்­கில் செயல்­பாட்­டிற்கு வரும் நிலை­யில், ஒரு சில மாற்­றங்­கள் நிதி­யாண்­டின் துவக்­கம் முதல் அம­லுக்கு வரு­கின்­றன.
புதிய நிதி­யாண்டு பிறக்க உள்ள நிலை­யில், வரு­மான வரிதொடர்­பாக, உட­ன­டி­யாக அம­லுக்கு வரும் மாற்­றங்­களை அறிந்­தி­ருப்­பது அவ­சி­யம்.

விண்­ணப்ப படி­வங்­கள்:


வரி தாக்­கல் செய்­ப­வரின் நல­னுக்­காக, வரு­மான வரித்­துறை, முன்­ன­தாக தக­வல்­கள் பூர்த்தி செய்­யப்­பட்ட படி­வத்தை அறி­மு­கம் செய்­தது. இது மேலும் விரி­வாக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, வரு­மான வரி தாக்­கல் செய்­ப­வர்­கள், ஏற்­க­னவே பூர்த்தி செய்­யப்­பட்ட படி­வத்­தில், ஊதி­யம், வட்டி, டிவி­டெண்ட் உள்­ளிட்ட தக­வல்­களை சரி பார்த்­துக்­கொள்ள வேண்­டும்.

பி.எப்., பிடித்­தம்:


பி.எப்., திட்­டத்­தில் ஆண்­டுக்கு, 2.50 லட்­சம் ரூபாய்க்கு மேல், ஊழி­யர் தரப்­பில் செலுத்­தப்­படும் தொகை மீதான வட்டி, வரிக்கு உட்­படும் என பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­பட்டுள்­ளது. நிதி மசோ­தா­வில், இந்த வரம்பு, ஐந்து லட்­ச­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. அதிக அள­வில் பி.எப்., பங்­க­ளிப்பு செலுத்­து­ப­வர்­கள் இதை மன­தில் கொள்ள வேண்­டும்.

வய­தா­ன­வர்­க­ளுக்கு சலுகை:


எழு­பத்து ஐந்து வய­துக்கு மேற்­பட்ட மூத்த குடி­ம­கன்­கள், வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்ய வேண்­டி­ய­தில்லை என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பென்­ஷன் மற்­றும் வட்டி வரு­மா­னம் மட்­டும் பெறு­ப­வர்­க­ளுக்கே இது பொருந்­தும். இரண்­டும் ஒரே வங்­கி­யில் அமைந்­தி­ருக்க வேண்­டும்.

வரி பிடித்­தம்:


எப்­போ­துமே வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­வது மிக­வும் நல்­லது. வரி கணக்கு தாக்­கல் செய்­வ­தில் பல்­வேறு அனு­கூ­லங்­கள் இருக்­கின்­றன. இவ்­வாறு தாக்­கல் செய்­யா­த­வர்­கள், கடந்த இரண்டு ஆண்­டு­களில் ஐம்­ப­தா­யி­ரம் ரூபாய்க்கு மேல் டி.டீ.எஸ்., பிடித்­தம்
பெற்­றி­ருந்­தால், 5 சத­வீ­தம் டி.டீ.எஸ்., அல்­லது டி.சி.எஸ்., செலுத்த வேண்­டும்.

புதிய முறை:


முந்­தைய ஆண்டு பட்­ஜெட்­டில், வரு­மான வரி தாக்­கல் செய்­ப­வர்­க­ளுக்­கான புதிய முறை அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. அதிக சலு­கை­கள் கொண்ட, ஆனால் வழக்­க­மான சில பிடித்­தங்­கள் பொருந்­தாத இந்த முறையை தேர்வு செய்ய வேண்­டும். வரி தாக்­கல் செய்­யும் போது இதை தீர்­மா­னித்­துக் ­கொள்­ள­லாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)