பதிவு செய்த நாள்
03 ஏப்2021
20:23

புதுடில்லி:மத்திய அரசு, உணவு பதப்படுத்தும் துறைக்கு, 10 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் மதிப்பில்,‘பி.எல்.ஐ.,’ எனும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்க திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதை, இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பான, ‘சி.ஐ.ஐ.,’ வரவேற்றுள்ளது.இந்த திட்டம், இந்த துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து, இவ்வமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:இந்த திட்டம், உலக சந்தைகளில், இந்திய பிராண்டுகளை உயர்த்திக் கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குவதாக இருக்கும். ஒரு பக்கம் விவசாய துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பை, சரியான சமயத்தில் வழங்கும் வகையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியுடன் இணைந்த வளர்ச்சியை நாம் பெற முடியும்.இந்த திட்டத்தின் வாயிலாக, நவீன வகையிலான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, சில்லரை விற்பனையில் திறன் மிகுந்த வினியோக மேலாண்மையும் மேலோங்கும். இந்த ஊக்கத் திட்டத்தின் மூலம், உணவு பதப்படுத்தும் துறை வளர்ச்சி காண்பதுடன், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும்.இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|