பதிவு செய்த நாள்
03 ஏப்2021
20:25

புதுடில்லி:சவுதி அரேபியா, அதன் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொண்ட நிலையில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யுமாறு, பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இது குறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா, அதன் எண்ணெய் தேவையில், 85 சதவீதத்தை இறக்குமதியை நம்பி இருக்கிறது. எனவே, உலகளவிலான சப்ளை மற்றும் விலை நம்மை பாதிப்பதாக அமைந்துவிடுகிறது.கடந்த பிப்ரவரியில், சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக்கொண்டது. இதனால், இந்தியா இப்போது அதன் தேவைக்காக வேறு நாடுகளின் பக்கம் திரும்ப வேண்டியதாகிவிட்டது.இதையடுத்து, பொதுத்துறை நிறுவனங்களான, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள், மத்திய கிழக்கு பகுதிக்கு வெளியே கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், கூட்டு பேரம் மூலம், குறைந்த விலைக்கு வாங்குவது குறித்தும் ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.பொதுவாக, சவுதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி வளைகுடா நாடுகள் ஆகியவற்றிலிருந்து தான் எண்ணெய் வாங்குவது வழக்கம். ஆனால், அவற்றில் தற்போது கட்டுப்பாடுகள் வாங்குபவர்களுக்கு எதிராக இருக்கிறது. இதையடுத்தே, அரசு தரப்பிலிருந்து இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|