பதிவு செய்த நாள்
03 ஏப்2021
20:27

புதுடில்லி:மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான, ‘ஏத்தர் எனர்ஜி’ அதனுடைய தயாரிப்பை, அடுத்த நிதியாண்டில், மும்மடங்கு அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில், ஏத்தர் நிறுவனத்துக்கான ஆலை அமைந்துள்ளது. தற்போது இந்த ஆலை, ஆண்டு ஒன்றுக்கு, ஒரு லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதாக இருக்கிறது. இங்கு, ‘ஏத்தர் 450 எக்ஸ்.,’ எனும், ஒரே ஒரு மாடல் ஸ்கூட்டர் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் விலை கிட்டத்தட்ட, 1.5 லட்சம் ரூபாய் ஆகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான தருண் மேத்தா கூறியதாவது:கடந்த பிப்ரவரியில் துவக்கப்பட்ட எங்களுடைய ஓசூர் ஆலையிலிருந்து, மாதம் ஒன்றுக்கு, 92 ஆயிரம் வாகனங்களை தயாரிக்க இயலும். தற்போது, தேவைகள் மற்றும் விசாரணைகள் அதிகரித்து வருவதை அடுத்து, தயாரிப்பை, அடுத்த நிதியாண்டில் மும்மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஓசூர் ஆலையில் ஆண்டுக்கு, 5 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் அளவுக்கு விஸ்தரிக்க தேவையான நில வசதி இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஏத்தர் நிறுவனம் இதுவரை ஓசூரில், 130 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை மேற்கொண்டு உள்ளது. பெங்களூருவில் உள்ள சிறிய ஆலையில், 2018ம் ஆண்டில் முதன் முதலாக, ‘ஏத்தர் 450’ எனும் வாகனத்தை தயாரித்து வெளியிட்டது. ஆனால் பின்னர் அந்த வாகன தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. மின்சார இருசக்கர வாகன துறையில், இந்தியாவில், மொத்தம், 20 நிறுவனங்கள் உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|