பதிவு செய்த நாள்
03 ஏப்2021
20:31

புதுடில்லி:‘ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம், இவ்வங்கி, 1,100 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
பங்கு வெளியீட்டின்போது, 700 கோடி ரூபாய்க்கு, புதிய பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. அத்துடன், நிறுவனர்கள் வசம் இருக்கும் 92.53 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, எதிர்கால மூலதனத் தேவைகளுக்கு பயன் படுத்திக் கொள்ள உள்ளது.
புதிய பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக, 500 கோடி ரூபாய்க்கு மிகாத அளவில், தனிப்பட்ட பங்கு விற்பனை மூலம் திரட்டிக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. அப்படி முன்னதாக நிதி திரட்டிக் கொள்ளும் பட்சத்தில், ஐ.பி.ஓ.,வின் போது விற்பனை செய்யப்பட இருக்கும் புதிய பங்குகள் எண்ணிக்கை குறைத்துக் கொள்ளப்படும்.
கடந்த, 2015ம் ஆண்டில், ரிசர்வ் வங்கி கொள்கை அளவில், 10 நிதி நிறுவனங்கள் சிறிய நிதி வங்கியாக செயல்பட தன்னுடைய இசைவை தெரிவித்தது. அதில், ஜனா வங்கியும் ஒன்று. இவ்வங்கி கடந்த, 2017ம் ஆண்டு ஏப்ரலில், வங்கிக்கான உரிமத்தை பெற்றது. இவ்வங்கியின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஆக்சிஸ் கேப்பிட்டல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்க உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|