பதிவு செய்த நாள்
05 ஏப்2021
11:36

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியா, மதுரையில் தனது புதிய மண்டல அலுவலகத்தை மதுரை, ஐயர் பங்களா பகுதியில் திறந்துள்ளது. இந்த மதுரை மண்டலம் ஏப்ரல் 1, 2021 முதல் அதன் செயல்பாடுகளைத் தொடங்கி உள்ளது.
எப்போதும் மாறிவரும் வங்கித் துறையின் தற்போதைய இயக்கம், சக வங்கிகளுக்கு சமமாகவும் மற்றும் எப்போதும் விரிவடைந்து வரும் வணிகத்துடனும் இருப்பதால் புதிய மண்டல அலுவலகம் அமைப்பதற்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, கோவை மண்டலத்திலிருந்து 56 கிளைகள் மற்றும் சென்னை மண்டலத்திலிருந்து 27 கிளைகள் வங்கி தேவைகளை திறம்பட பூர்த்தி செய்வதற்காக மறுசீரமைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் அரியலூர், கடலூர், கன்னியாகுமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் தஞ்சாவூர், தேனி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவாரூர், தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ஆகிய 18 மாவட்டங்கள் மதுரை மண்டலத்தில் இணைக்கப்படுகின்றன.
வங்கியின் தலைமை நிர்வாகத்தின் இந்த முடிவின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், இந்த பதினெட்டு மாவட்டங்களில் சிறந்த கண்காணிப்பு மற்றும் வளங்களைப் பயன்படுத்துதல் மூலம் வங்கியின் வாடிக்கையாளர் தளத்தை விரிவாக்குவதுடன் வணிக சிக்கல் தொடர்புடைய பிரச்சினைகளை திறம்பட நிர்வகித்தல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக வாடிக்கையாளர்களுடன் அதிக இணக்கத்துடன் மதுரை பிராந்தியத்தின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதாகும். இதன் மூலம் வங்கியின் குறிக்கோளான "சேவையைக் கடந்த நேசமிகு உறவு" இந்த மாவட்டங்களின் மக்கள் மனதில் நிலைநிறுத்தப்படும். மொத்தம் ரூ. 6,012 கோடி வணிகத்துடன் இது 83 கிளைகளுக்கான கட்டுப்பாட்டு அலுவலகமாக இருக்கும், மற்றும் தெற்கு, சென்னை தேசிய வங்கி குழுவின் கீழ் செயல்படும் .
புதிதாக திறக்கப்பட்ட மண்டல அலுவலக முகவரி : எஸ்.எப் எண். 64 / 1சி, ஸ்ரீ ராம் காம்ப்ளக்ஸ், உச்சபரம்பு பிரதான சாலை, ஐயர் பங்களா, மதுரை - 625014.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|