தனியார் வங்கிகளை விட  பொதுத்துறை வங்கிகள்  அதிகளவில் வட்டி குறைப்பு தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகள் அதிகளவில் வட்டி குறைப்பு ...  வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை  ரிசர்வ் வங்கி கவர்னர்  அறிவிப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகள் அதிகளவில் வட்டி குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2021
21:16

புதுடில்லி:வட்டி குறைப்பு விஷயத்தில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகளை விட, அதிகளவில் வட்டியை குறைத்துள்ளன.

கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார மீட்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்தன.இதில், ரிசர்வ் வங்கி, பல வட்டி குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அறிவித்து வந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தும், அதன் பலன் மக்களை சேரும் வகையிலான நடவடிக்கைகளை, பல வங்கிகள் எடுக்கவில்லை.

குறிப்பாக தனியார் துறை வங்கிகள், ரிசர்வ் வங்கி, வட்டியை குறைத்தும் தங்களுடைய வட்டி விகிதத்தை அந்த அளவுக்கு குறைக்கவில்லை.ரிசர்வ் வங்கியின் தரவுகளிலிருந்து, இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.ரிசர்வ் வங்கி, 1.15 சதவீதம் வட்டியை குறைத்த போது, பொதுத்துறை வங்கிகள், 1.14 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்துள்ளன. இவ்வங்கிகளில், கடந்த ஆண்டு மார்ச்சில், 8.64 சதவீதமாக இருந்த வட்டி, இந்த ஆண்டு பிப்ரவரியில், 7.5 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆனால் தனியார் துறை வங்கிகள், 0.38 சதவீதம் அளவுக்கு மட்டுமே வட்டி குறைப்பை செய்துள்ளன. வெளிநாட்டு வங்கிகள், 0.63 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்துள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)