மாருதி சுசூகி உற்பத்தி: மார்ச்சில் அதிகரிப்பு மாருதி சுசூகி உற்பத்தி: மார்ச்சில் அதிகரிப்பு ...  நாட்டின் கார்கள் விற்பனை மாருதி சுசூகி நிறுவனம் முதலிடம் நாட்டின் கார்கள் விற்பனை மாருதி சுசூகி நிறுவனம் முதலிடம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை 2.79 லட்சமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
19:24

புதுடில்லி:கடந்த மார்ச்சில், பயணியர் வாகன விற்பனை, 28.39 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான – படா தெரிவித்துள்ளது.

இந்தியாவில், பிராந்திய அளவில், 1,482 வாகன போக்குவரத்து மண்டல அலுவலகங்கள் உள்ளன.

புள்ளி விபரம்

அவற்றில், 1,277 அலுவலகங்களில், மார்ச்சில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அடிப்படையில், இந்த புள்ளி விபரம் தயாரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, படா வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த மார்ச்சில், பயணியர் வாகன விற்பனை, 28.39 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2 லட்சத்து, 79 ஆயிரத்து, 745 ஆக அதிகரித்துள்ளது.

இது,2020, மார்ச்சில், 2 லட்சத்து, 17 ஆயிரத்து,879 ஆக இருந்தது. கொரோனா மற்றும் ஊரடங்கின் தாக்கத்திலும், பயணியர் வாகன விற்பனை உயர்ந்துள்ளது. இது, வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதை காட்டுகிறது.அதேசமயம், மார்ச்சில், இரு சக்கர வாகன விற்பனை, 35.26 சதவீதம் குறைந்து, 11 லட்சத்து, 95 ஆயிரத்து, 445 ஆக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 18 லட்சத்து,46ஆயிரத்து, 613 ஆக இருந்தது.

வளர்ச்சி

அதுபோல, இதே காலத்தில், மூன்று சக்கர வாகன விற்பனை, 50.72 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 77 ஆயிரத்து, 173லிருந்து, 69 ஆயிரத்து, 82 வாகனங்களாக சரிவடைந்துள்ளது.இதே காலத்தில், வர்த்தக வாகன விற்பனை, 42.2 சதவீதம் குறைந்து, 1லட்சத்து, 16 ஆயிரத்து, 559லிருந்து, 67ஆயிரத்து, 372 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

எனினும், டிராக்டர் விற்பனை, 29.21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 53 ஆயிரத்து, 463லிருந்து, 69 ஆயிரத்து, 82 ஆக உயர்ந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், ஒட்டுமொத்த வாகனப் பதிவு, 28.64 சதவீதம் குறைந்து, 23 லட்சத்து, 11 ஆயிரத்து, 687லிருந்து, 16 லட்சத்து, 49 ஆயிரத்து, 678 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த, 2020 – 21ம் நிதியாண்டில், நாட்டில் அதிகம் விற்பனையான முதல், 5 கார்கள், மாருதி சுசூகி நிறுவனத்தின் ... மேலும்
business news
புதுடில்லி:கார்கள் தயாரிப்பில் நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான மாருதி சுசூகியின் உற்பத்தி கடந்த மார்ச் ... மேலும்
business news
புதுடில்லி:மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான, ‘ஏத்தர் எனர்ஜி’ அதனுடைய தயாரிப்பை, அடுத்த நிதியாண்டில், ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, கடந்த மார்ச் மாதத்தில், 1.67 லட்சம் ... மேலும்
business news
சென்னை:டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், அதன் இருசக்கர வாகன ஏற்றுமதி, கடந்த மார்ச் மாதத்தில், ஒரு லட்சத்தை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)