உடல் தகுதியை நாடும் இந்தியர்கள்உடல் தகுதியை நாடும் இந்தியர்கள் ...  கடந்த ஆண்டை போல் பாதிப்பு இருக்காது: மூடிஸ் கடந்த ஆண்டை போல் பாதிப்பு இருக்காது: மூடிஸ் ...
சிறு சேமிப்பு திட்­டங்­க­ளின் முக்­கி­யத்­து­வம என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
19:16

தனிநபர் நிதியில் சிறு சேமிப்பு திட்டங்கள் வகிக்கும் பங்கை தெரிந்து கொள்ள இவற்றின் தன்மையை புரிந்து கொள்வது அவசியம்.

சரா­சரி முத­லீட்­டா­ளர்­கள் அதி­கம் நாடும் சிறு சேமிப்பு திட்­டங்­களுக்­கான வட்டி விகி­தம்
அண்­மை­யில் குறைக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்டு, பின் அதற்­கான உத்­த­ரவு திரும்ப
பெறப்­பட்­டது. இந்தநட­வ­டிக்கை விவா­தத்­தை­யும்,சர்ச்­சை­யை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


தற்­போ­தைய வட்டி விகி­தம் தொட­ரும் என அறி­விக்­கப்­பட்­டு உள்ளது சரா­சரி
முத­லீட்­டா­ளர்­களை நிம்­மதி பெரு­மூச்சு விட வைத்­தி­ருந்­தா­லும், சிறு சேமிப்பு
திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகி­தம் காலாண்­டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்­கப்­ப­டு­வ­தால், வரும் காலாண்­டு­கள் இது மாற்றி அமைக்­கப்­பட வாய்ப்­பி­ருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கிறது.

பல­வித பலன்­கள்

சிறு சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­ட­லாம் என்­பது, இத்­திட்­டங்­களில் முத­லீடு செய்­ப­வர்­கள் பின்­பற்ற வேண்­டிய உத்தி தொடர்­பான கேள்­வி­களை எழுப்­பு­கிறது. எனி­னும் முத­லீட்டு உத்­தியை தீர்­மா­னிக்­கும் முன், தனி­ந­பர் நிதி­யில் சிறு­சே­மிப்பு
திட்­டங்­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை புரிந்து கொள்­வது அவ­சி­யம்.


பி.பி.எப்., செல்­வ­ம­கள் திட்­டம், அஞ்­ச­லக வைப்பு நிதி உள்­ளிட்­டவை சிறு சேமிப்பு
திட்­டங்­க­ளின் கீழ் வரு­கின்­றன. சீரான சேமிப்பை சாத்­தி­ய­மாக்­கு­வது இவற்­றின் முக்­கிய நோக்­கம். அர­சின் பாது­காப்பை கொண்ட இந்த திட்­டங்­கள் பெரும்­பா­லும் அஞ்­ச­ல­கங்­க­ளாலும், வங்­கி­க­ளா­லும் அளிக்­கப்­ப­டு­கின்­றன.பொது­வாக இந்த திட்­டங்­கள் குறைந்த இடரை நாடும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஏற்­ற­வை­யாக அமை­கின்­றன. அரசு அளிக்­கும் பாது­காப்பு இதற்கு கார­ணம். அதே நேரத்­தில், வழக்­க­மான முத­லீ­டு­க­ளு­டன்ஒப்­பி­டும் போது இவற்­றின் பலன் அதி­க­மாக இருக்­கிறது.


மேலும், நீண்ட கால நோக்­கி­லும்இவை பலன் அளிப்­ப­வை­யாக இருக்­கின்­றன. இந்த
திட்­டங்­கள் வரிச்­ச­லுகை பலனை கொண்­டி­ருப்­பது இவற்­றின் முக்­கிய சாத­க­மாக கரு­தப்­ப­டு­கிறது. பி.பி.எப்.,செல்வ மகள் திட்­டம், தேசிய சேமிப்பு சான்­றி­தழ் போன்­றவை வரிச்­ச­லு­கைக்கு உரி­யவை.


நிதி இலக்­கு­கள்


மேலும், சிறு சேமிப்பு திட்­டங்­களில் முத­லீடு செய்­வ­தும் எளிமை­யா­னது. அஞ்­ச­லக
கிளை­களை அணுகி தேவைக்­கேற்ற திட்­டத்­தில் முத­லீடு செய்­ய­லாம். பணத்தை விலக்கி கொள்­ளும் செயல்­மு­றை­யும் எளி­தா­னது.அதே நேரத்­தில், வங்கி வைப்பு நிதி முத­லீட்டை விட இவை அளிக்­கும் பலன் அதி­க­மா­னது. தற்­போது வைப்பு நிதி­க­ளுக்­கான வட்டி விகி­தம் மிக­வும் குறை­வாக இருப்­பதை மன­தில் கொள்ள வேண்­டும். அதோடு, லாக் இன் காலம் கொண்ட திட்­டங்­களில் முத­லீடு செய்­தால், தொடர்ந்து தற்­போ­தைய வட்டி விகித பலனை பெறும் வாய்ப்பு உள்­ளது.

எனவே, சிறு சேமிப்பு திட்ட முத­லீட்டை தீர்­மா­னிக்­கும் போது ஒட்­டு­மொத்த நிதி திட்­ட­மி­டலை கவ­னத்­தில் கொள்ள வேண்­டும். ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­கள் நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ற வகை­யில் பொருத்­த­மான முத­லீடு தொகுப்பை பெற்­றி­ருக்க வேண்­டும்.அந்த வகை­யில்
முத­லீடுதொகுப்­பிற்கு சம­நிலை அளிக்­கும் கடன்­சார் முத­லீட்­டின் கீழ் சிறு சேமிப்பு திட்­டங்­கள் வரு­கின்­றன.


பாது­காப்­பான முத­லீடு என்­ப­தோடு, நீண்ட கால நோக்­கில் வளத்தை உரு­வாக்­கும் தன்மை கொண்­ட­வை­யாக அமை­கின்­றன. எனவே, இந்த திட்­டங்­க­ளின் வட்டி விகி­தம், வரி சேமிப்பு, லாக் இன் காலம் உள்­ளிட்ட அம்­சங்­களை பரி­சீ­லித்து, நிதி இலக்­கிற்கு ஏற்ப முத­லீடு செய்­வது பொருத்­த­மாக அமை­யும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை, 17 ஆயிரத்து, 61 கோடி ரூபாய் அளவுக்கு, ‘ரீபண்டு’ வழங்கி இருப்பதாக, வருமான ... மேலும்
business news
மும்பை:தங்க நகைகள் வாங்குவதற்கு சிறந்த நாளாக கருதப்படும், ‘அக்‌ஷய திரிதியை’ நாளைய தினம் வருகிறது. இந்நிலையில் ... மேலும்
business news
புதுடில்லி:நிதியமைச்சகத்தின் கருத்துகளை எதிரொலிக்கும் விதமாக, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ இந்தியாவில் ... மேலும்
business news
புதுடில்லி:பெருந்தொற்றையும் மீறி, கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் 10 ஆண்டுகளில் ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில் ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், ‘ஐபோன் 12’ உற்பத்தி சரிவைக் கண்டுள்ளதாக, ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)