பதிவு செய்த நாள்
16 ஏப்2021
19:13

புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, ‘சிட்டி’ நிறுவனம், இந்தியாவில், அதன் நுகர்வோர் வங்கி வணிகத்திலிருந்து வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், நுகர்வோர் வணிகத்துக்கு பதிலாக, நிறுவனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.நுகர்வோர் வங்கி வணிகத்தில் கிரெடிட் கார்டுகள், ரீட்டெய்ல் பேங்கிங், வீட்டுக் கடன்கள், சொத்து நிர்வாகம் ஆகிய வணிகங்கள் அடங்கும். இந்த பிரிவுகளில் இவ்வங்கி, கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
சிட்டி நிறுவனம் இந்தியாவில், கடந்த, 1902ம் ஆண்டில் நுழைந்தது. 1985ல் நுகர்வோர் வங்கி வணிகத்தில் இறங்கியது.சிட்டி வங்கிக்கு இந்தியாவில், 35 கிளைகள் உள்ளன. மேலும், 4 ஆயிரம் பேர் இந்த நுகர்வோர் வங்கி வணிக பிரிவில் பணியாற்றி வருகிறார்கள். இந்தியா உள்ளிட்ட, 13 நாடுகளில், நுகர்வோர் வங்கி வணிகத்திலிருந்து சிட்டி நிறுவனம் வெளியேற இருப்பதாக, அந்நிறுவனத்தின் உலகளவிலான தலைமை செயல் அதிகாரி ஜேன் பிரசெர் அறிவித்துள்ளார்.
இது குறித்து, சிட்டி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷு குல்லர் தெரிவித்துள்ளதாவது:நிறுவனத்தின் அறிவிப்பால், இந்தியாவில், வங்கியின் செயல்பாட்டில் உடனடி மாற்றங்கள் எதுவும் இருக்காது. உடனடி பாதிப்புகள் எதுவும் ஊழியர்களுக்கும் இருக்காது. இப்போது இருப்பது போன்ற அதே கவனிப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவைகள் தொடரும்.இவ்வாறு அவர் தெரிவித்துஉள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|