பதிவு செய்த நாள்
16 ஏப்2021
20:31

புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், அதன் குறிப்பிட்ட கார் மாடல்கள் சிலவற்றின் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட, 22 ஆயிரத்து, 500 ரூபாய் வரை கார்களின் விலையை அதிகரித்துள்ளது, இந்நிறுவனம்.
இது குறித்து இந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: நிறுவனம் குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை அதிகரித்துள்ளது. தயாரிப்புக்கு தேவைப்படும் உள்ளீட்டு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற காரணத்தால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த விலை உயர்வு உடனே அமலுக்கு வருகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கார்களின் சராசரி விலை உயர்வு, 1.6 சதவீதம் அளவுக்கு இருக்கிறது.கடந்த ஓராண்டு காலமாகவே, உள்ளீட்டு பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தால், அவை கார்களின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. எனவே, நிலைமையை சமாளிக்க, ஏப்ரலில் இருந்து விலையை அதிகரிக்க இருப்பதாக, கடந்த மார்ச் மாதத்தில் மாருதி சுசூகி தெரிவித்துஇருந்தது.
இதற்கிடையே, கடந்த ஜனவரி, 18ம் தேதியன்று குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை, 34 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது. தற்போது மீண்டும் விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.நடப்பு ஆண்டில், மாருதி மட்டுமின்றி, பல்வேறு நிறுவனங் களும், தங்களது தயாரிப்புகளின் விலையை அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|