பதிவு செய்த நாள்
22 ஏப்2021
19:54
பெங்களூரு:கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்புகள் காரணமாக, ஏராளமான வணிகங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்தன. பல வணிகங்கள் மூடப்பட்டன. ஆனால், பெங்களூருவைச் சேர்ந்த, விபா ஹரிஷ் எனும், 25 வயது பெண், தன்னுடைய வணிகத்தில் சாதனை படைத்திருக்கிறார்.
அவர் தொழில் துவங்கிய ஓராண்டிலேயே, ‘போர்ப்ஸ் ஆசியா 30’ பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்.போர்ப்ஸ் பத்திரிகையின், ஆசிய அளவில், 30 வயதுக்குட்பட்ட வெற்றிகரமான தொழிலதிபர்களின் பட்டியல் இது.விபா ஹரிஷ் நிறுவனத்தின் பெயர், காஸ்மிக்ஸ். இது மூலிகை ஊட்டச்சத்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
தொழில் துவங்கிய ஓராண்டிலேயே, 2கோடி ரூபாய் விற்றுமுதலை எட்டியது. இதற்கு முக்கிய காரணம், அதன் தயாரிப்பு மற்றும் சந்தை உத்தி ஆகியவையே. இளைஞர்களிடம் குறிப்பாக, பெண்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாத நிலையில், மூலிகைகள் மூலமாக ஊட்டச்சத்துகளை வழங்க திட்டமிட்டு, இந்த வணிகத்தை துவக்கினார் விபா ஹரிஷ்.காஸ்மிக்ஸ் நிறுவனம், எட்டு வகையான தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|