‘ஸ்மார்ட் போன்’ வர்த்தகம் பாதிப்பு ‘ஸ்மார்ட் போன்’ வர்த்தகம் பாதிப்பு ... இந்தியர்கள் முதலீடு செய்ய பிரிட்டனை விரும்புகின்றனர் இந்தியர்கள் முதலீடு செய்ய பிரிட்டனை விரும்புகின்றனர் ...
ஜி வரிசை ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் மோடோரோலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
20:06

மோடோ ஜி 60 மற்றும் மோடோ ஜி 40 ப்யூஷன் ஆகிய இரு புதிய ஜி வரிசைக் கருவிகளை உலகளாவிய பயன்பாட்டுக்காக இந்தியாவிலேயே தயாரித்தது குறித்த அறிவிப்பை முதன் முதலாக மோடோரோலா இந்தியாவில் அறிவித்தது. அசத்தல் மோடோ ஜி60 மற்றும் மோடோ ஜி40 ப்யூஷன் ஆகியவை டைனமிக் கிரே மற்றும் ரோஸ்டெட் ஷாம்பைன் ஆகிய இரு கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும்.

புத்தம் புதிய மோடோ ஜி60 27 ஏப்ரல் 12 பிஎம் முதல் ப்ளிப்கார்ட்டில் ரூ 17,999/-க்கும் கிடைக்கும்.புத்தம் புதிய மோடோ ஜி40 ப்யூஷன் 1 மே 12 பிஎம் முதல் ப்ளிப்கார்ட்டில் 4/64ஜிபி வேரியண்ட் ரூ 13,999/- விலைக்கும், 6/128 ஜிபி வேரியண்ட் ரூ 15,999/- விலைக்கும் கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அட்டைகள் மற்றும் ஐசிஐசிஐ டெபிட் / கிரெடிட் அட்டை இஎம்ஐ பணப்பரிமாற்றங்கள் மூலம் வாங்கினால் ஜி60 ரூ 1500/- க்கும் ஜி40 ப்யூஷன் ரூ.1000/- உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மோடோ ஜி 60 புத்தம் புதிய அல்ட்ரா பிக்ஸெல் தொழில்நுட்பத்துடன் துல்லியமான மற்றும் ஒளிரும் உருவப்படங்களுக்கு 9மடங்கு ஒளி உணர்வையும், 108 எம்பி க்வாட் பங்க்ஷன் கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்ட முதல் ஜி வரிசை ஸ்மார்ட்போன் என்னும் பெருமையையும் பெற்றுள்ளது. ப்ரண்ட் பேசிங்க் 32 எம்பி செல்பி கேம் 4மடங்கு ஒளி உணர்வை க்வாட் பிக்ஸெல் தொழில்நுட்பம் மூலம் வழங்கும்.

இதிலுள்ள க்வால்கம் ஸ்நப்டிராகன் 732ஜி புராசஸர் ஆகியவை 120ஹெச்இசட் 6.8 இன்ச் ஹெச்டிஆர்10 டிஸ்ப்ளே மற்றும் அதன் ஹூட் கீழேயுள்ள 6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் கிராபிக்ஸ்களை மிக வேகமாக வழங்கும். மோடோ ஜி40 பூஷன் 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் கூடிய 64எம்பி க்வாட் பங்க்ஷன் கேமரா, ஆண்ட்ராயிட் 11 உடன் கூடிய நியர் – ஸ்டாக் ஆண்ட்ராயிட் அனுபவம், கைபேசிகளுக்கான திங்க் ஷீல்ட் மேம்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அனைவருக்கும் ஏற்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. அசத்தலான க்வால்கம் ஸ்நாப்டிராகன் 732ஜி 120 ஹெச்இசட் 6.8 இன்ச் ஹெச்டிஆர் 10 டிஸ்ப்ளே கேமிங்க் அல்லது காணொலி பார்க்கும் போது மென்மையான மற்றும் எளிதான பார்க்கும் அனுபவத்தைத் தரும் .

மோடோ ஜி60 மற்றும் மோடோ ஜி40 ப்யூஷன் ஆகியவை சாட் ப்பிள்ஸ், ஸ்மார்ட் டிவைஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட ஆண்ட்ராயிட் 11 சிறப்பம்சங்களும் இதிலுண்டு. வாட்டர் ரிபெல்லண்ட் வொர்ரி ப்ரூஃப், மை யுஎக்ஸ் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் ரியர் கேமராவைச் சுற்றியுள்ள டிண்டெட் ஹவுசிங்க் அதன் அழகுக்கும், தொழில்நுட்பத்துக்கும் மதிப்பைக் கூட்டுகின்றன. கெஸ்சர், கேமராவைத் திறக்க மணிக்கட்டைத் திருப்பினாலோ, ப்ளாஷ்லைட்டை இயக்க இருமுறை திருப்பினாலோ, ஸ்க்ரீன் ஷாட் எடுக்கத் தொட்டாலோ, பிடித்தமான அம்சங்களைப் பயன்படுத்தி அதை உள்ளுணர்வுடன் இயற்கை மயமாக்கலாம். டிஸ்ப்ளே அம்சம் அறிவிக்கைகள் மற்றும் அப்டேட்களின் விரைவான ப்ரீவியூவைத் தருவதால் உங்கள் கைபேசியை அன்லாக் செய்யாமலேயே சுற்றி நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். விரும்பும் ஐகான் மற்றும் விட்ஜெட்களின் லேஅவுட் நீங்கள் எதிர்பார்க்கும் கண்கவர் தோற்றத்தைக் கொடுக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)