பதிவு செய்த நாள்
26 ஏப்2021
22:39
இந்தியர்கள் அதிக அளவில் அஜினோமோட்டோவை விரும்புவதால் ஆண்டுக்கு 10,500 மெட்ரிக் டன் மோனோசோடியம் குளுட்டாமேட் விற்பனையாவதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாகவும் அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியும், பேராசிரியருமான கிக்குனே இக்கிடா என்பவர் 1909ஆம் ஆண்டு அஜினோமோட்டோ எனப்படும் சுவையூட்டியை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் குளுட்டாமேட் வாயிலாக கிடைக்கும் இந்த சுவைக்கு, இந்த பேராசிரியர் ‘உமாமி’ என்றும் பெயர் இட்டார். எவ்வித பக்கவிளைவுகளையோ, உடலுக்கு எந்தவிதமான தீமைகளையோ ஏற்படுத்தாத இந்த மோனோசோடியம் குளுட்டாமேட் கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் போன்ற தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக எம்.எஸ்.ஜி. சுவையூட்டி, கரும்பில் இருந்துதான் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கரும்பு, ஆலைகளில் இடப்பட்டு சாராக பிழியப்படுகிறது.
அந்த கரும்புச் சார், நொதிக்க வைக்கப்பட்டு, எவ்வாறு பாலிலிருந்து தயிர் உருவாக்கப்படுகிறதோ அதேபோன்று பதப்படுத்தப்படுகிறது. அவ்வாறு கிடைக்கும் திரவம் குளுட்டாமிக் ஆசிட் என்று அழைக்கப்படுகிறது. பின்பு, குளுட்டாமிக் ஆசிட் பதனப்படுத்தப்பட்டு மோனோசோடியம் குளுட்டாமேட் என்ற திடப்பொருளாக மாற்றப்படுகிறது. பின்பு, வெப்ப மற்றும் குளிர் காற்று மூலம் உலர வைக்கப்பட்டு சிறிய, சிறிய பொடிகளாக (சர்க்கரை போன்று) செய்து, பாக்கெட்டுகளில் இடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மோனோசோடியம் குளுட்டாமேட் 100 சதவீத சைவ உணவுப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது, என்று அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த சுவையூட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஜப்பானில் பல ஆண்டுகளாக பயன்படுத்தபட்டு வந்த நிலையில், அமெரிக்காவில் 1964-ம் ஆண்டிலும், இந்தியாவில் 2003ம் ஆண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில், துவக்கத்தில், பெரிய ஹோட்டல்கள், தொழிற்சாலைகளிலுள்ள சமையல் கூடங்கள் போன்றவற்றில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த எம்.எஸ்.ஜி. சுவையூட்டி, பின்பு படிப்படியாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் சில்லரையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, மோனோசோடியம் குளுட்டாமேட்டின் விற்பனை உலகளவில் ஆண்டுக்கு 4.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியர்கள் அதிக அளவில் அஜினோமோட்டோவை விரும்புவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே இந்தியாவில் இந்த சுவையூட்டியின் விற்பனை ஆண்டுக்கு 10,500 மெட்ரிக் டன்னாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|