பதிவு செய்த நாள்
28 ஏப்2021
19:47

புதுடில்லி;உணவு பட்டுவாடா நிறுவனமான, ‘ஸொமேட்டோ’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக, 8,250 கோடி ரூபாய் திரட்டவும் இந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சீனாவை சேர்ந்த, ‘ஆன்ட்’ குழுமத்தின் பின்னணியில் செயல்படும் ‘ஆன்லைன்’ உணவு பட்டுவாடா நிறுவனமாகும், ஸொமேட்டா.இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, 7,500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 750 கோடி ரூபாய்க்கு பங்குதாரர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவன பங்குதாரர்களில் ஒன்றான, ‘இன்போ எட்ஜ்’ நிறுவனம் தன் வசம் இருக்கும். 750 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்க இருப்பதாக தெரியவந்து உள்ளது.மேலும், புதிய பங்குவெளியீட்டுக்கு முன்னதாக, 1,500 கோடி ரூபாய் வரை திரட்டும் திட்டத்தையும் இந்நிறுவனம் வைத்துள்ளது.
அப்படி திரட்டப்படும் பட்சத்தில், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் தொகை குறையக்கூடும்.திரட்டப்படும் தொகையில், 5,625 கோடி ரூபாயை, புதிய இடங்களில் வணிகத்தை விரிவுபடுத்துவது, பிற வணிகங்களை கையகப்படுத்துவது போன்றவற்றுக்காகவும்; மீதியை பொதுவான நிர்வாக செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|