பதிவு செய்த நாள்
28 ஏப்2021
23:23

புதுடில்லி:பழைய இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும், ‘கிரெட் ஆர்’ நிறுவனம், மின்சார பைக் தயாரிக்கும் நிறுவனமான, கிரேயன் மோட்டார்ஸ் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள், தங்களிடம் இருக்கும் பழைய பெட்ரோல் இரு சக்கர வாகனத்தை கொடுத்துவிட்டு, கிரேயன் நிறுவன வாகனங்களை வாங்கிக் கொள்ள முடியும்.பழைய பெட்ரோல் வாகனத்தை உடனடியாக மதிப்பிட்டு விலையை தெரிவித்து விடுவதால், மீதி தொகையை மட்டும் கொடுத்து மின்சார வாகனத்தை வாங்கி கொள்ளலாம்.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை திட்ட அதிகாரி சசிதர் நந்திகம் கூறியதாவது: தற்சமயம், இந்த எக்ஸ்சேஞ்ச் திட்டம் டெல்லி தலைநகர் பிராந்தியம், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
இந்தியாவில் விற்பனை ஆகும் இருசக்கர வாகன பிரிவில், மின்சார வாகன பங்களிப்பு ஒரு சதவீதமாக உள்ளது. விரைவில் பழைய மின்சார வாகன விற்பனையும் அதிகரிக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|