பதிவு செய்த நாள்
28 ஏப்2021
23:30

புதுடில்லி:அமெரிக்காவின் பிரபல இதழான, டைம் இதழ், முதன் முறையாக வெளியிட்டுள்ள அதன், 100 செல்வாக்குமிக்க நிறுவனங்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொழில்நுட்ப நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ மற்றும், ஆன்லைன் கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘பைஜுஸ்’ நிறுவனம் ஆகியவை இடம்பிடித்துள்ளன.டைம் இதழ், எதிர்காலத்தை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் என குறிப்பிட்டு, இந்த பட்டியலை அதன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆரோக்கியம், பொழுதுபோக்கு, போக்குவரத்து, தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
புதுமை நிறுவனங்கள் வரிசையில் ஜூம், டிக்டாக், ஐகியா,மாடர்னா, நெட்பிளிக்ஸ் ஆகியவற்றின் வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனம் இடம்பெற்று உள்ளது.வினியோகஸ்தர்கள் பிரிவில், டெஸ்லா, ஹூவாவே, ஷாப்பிபை, ஆகியவற்றின் வரிசையில், பைஜுஸ் இடம்பிடித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|