பதிவு செய்த நாள்
29 ஏப்2021
21:11

மும்பை:நாம் நாட்டின் தங்கத்தின் தேவை மீண்டும் அதிகரித்துள்ளதாகவும்; கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 37 சதவீதம் அளவுக்கு தேவை அதிகரித்து இருப்பதாகவும், உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, கவுன்சில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், தங்கத்தின் தேவை, 37 சதவீதம் அதிகரித்து, 140 டன் ஆக உயர்ந்துள்ளது.கொரோனா சம்பந்தமான கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டது, மற்றும் தங்கத்தின் விலை குறைந்தது ஆகியவை,தேவையை அதிகரிக்க முக்கியமான காரணங்களாக அமைந்து இருக்கிறது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், தங்கத்தின் தேவை, 102 டன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மதிப்பீட்டு காலாண்டில், தங்கத்தின் தேவை, அதன் மதிப்பின் அடிப்படையின் பார்த்தால், 57 சதவீதம் அதிகரித்துள்ளது.அதாவது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், மதிப்பு, 37 ஆயிரத்து 580 கோடி ரூபாயாக இருந்தது, நடப்பு ஆண்டில், 58 ஆயிரத்து, 800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மொத்த ஆபரணங்களின் தேவை, 39 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 102.5 டன் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தங்கத்தின் மீதான முதலீட்டு தேவையும் இந்த காலாண்டில், 34 சதவீதம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, 15 ஆயிரத்து, 780 கோடி ரூபாய் மதிப்புக்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.விலையை பொறுத்தவரை, சராசரி உள்நாட்டு விலை, 10 கிராம், 47 ஆயிரத்து, 131 ரூபாயாகும்.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால், 14 சதவீதம் அதிகமாகும். ஆனால் காலாண்டு ஒப்பீட்டில் 6 சதவீதம் குறைவாக இருக்கிறது.ஜூன் காலாண்டில், தொற்று நோய் பரவல் காரணமாக, தேவை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|