பதிவு செய்த நாள்
29 ஏப்2021
21:13

புதுடில்லி:டாடா குழுமம், பிக்பாஸ்கெட் நிறுவனத்தின், 64.3 சதவீத பங்குகளை கையகப் படுத்துவதற்கு, இந்திய சந்தை போட்டி ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது.
டாடா குழுமம், ‘ஆன்லைன்’ மளிகை பொருட்கள் வர்த்தகத்தில் வலுவாக கால் ஊன்றுவதற்காக, பிக்பாஸ்கெட் நிறுவனத்தை கையகப்படுத்த முயற்சி செய்து, அதன், 64.3 சதவீத பங்குகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.தற்போது இந்த ஒப்பந்தத்துக்கு, இந்திய சந்தை போட்டி ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது.
டாடா குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றான, டாடா டிஜிட்டல், பிக்பாஸ்கெட் பங்குகளை வாங்குகிறது.டாடா குழுமம், ஆன்லைன் வாயிலாக தன்னுடைய அத்தனை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதற்காக, அதன் அனைத்து வணிகங்களையும் ஒரு மெகா செயலிக்கு கீழ் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாகவே, பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்த இருக்கிறது. பிக்பாஸ்கெட் நிறுவனம், 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவில் 25 நகரங்களில் இது செயல்பட்டு வருகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|