பதிவு செய்த நாள்
30 ஏப்2021
19:52

புதுடில்லி:நாட்டின் முதுபெரும் தொழிலதிபர்களில் ஒருவரான, ராகுல் பஜாஜ், ‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இருசக்கர, மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது, புனேவை சேர்ந்த பஜாஜ் ஆட்டோ. இதன் செயல் சாரா தலைவராக பொறுப்பு வகித்து வந்த ராகுல் பஜாஜ், அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்றுடன் அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து நிறுவனத்தின் தலைவராக, ராகுல் பஜாஜ் இடத்துக்கு, நிரஜ் பஜாஜ் வருகிறார். இவர் இன்று முதல் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார்.
ராகுல் பஜாஜ் நிறுவனத்தின் கவுரவ தலைவராக, ஐந்து ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார் என, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.ராகுல் பஜாஜ், 1972ம் ஆண்டிலிருந்து நிறுவன பொறுப்புகளை வகித்து வந்தார். 83 வயதாகும் அவர், கிட்டத்தட்ட, 50 ஆண்டு களாக நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார்.
இவரது காலத்தில் தான், ஸ்கூட்டர் தயாரிப்பில் கோலோச்சியது இந்நிறுவனம். குறிப்பாக, பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர், மிகவும் பிரபலமாக இருந்தது.இந்நிறுவனத்தின் விற்றுமுதல், 7.2 கோடி ரூபாயில் இருந்து, 12 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மிகவும் வெளிப் படையாக பேசும் தன்மை கொண்ட ராகுல் பஜாஜ், 2006 – 2010 ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|