பதிவு செய்த நாள்
02 மே2021
23:48

‘மியூச்சுவல் பண்ட்’களில், எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான முதலீடு வாய்ப்பு மூலம் முதலீடு செய்யப்படும் தொகை, இந்த ஆண்டு மார்ச் மாதம், 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.எஸ்.ஐ.பி., முறையில், மியூச்சுவல் பண்ட்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை சீராக முதலீடு செய்யலாம்.
இந்த ஆண்டு மார்ச் மாத காலத்தில் இந்த முறையில், 9,182 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது, 7,528 கோடியாக இருந்தது.மேலும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலீடு செய்யப்பட்ட அதிகபட்ச தொகை, 7,528 கோடி ரூபாயை விட இது அதிகமாகும். கடந்த இரண்டு மாதங்களில், எஸ்.ஐ.பி., முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையின் செயல்பாடு, வைப்பு நிதி உள்ளிட்ட முதலீடுகள் அளிக்கும் பலன் குறைவு ஆகியவை இதற்கான காரணமாக கருதப்படுகிறது. பி.எப்., சேமிப்பில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு வரி பிடித்தம் செய்யப்படுவதற்கான வரம்பு நிர்ணயமும், மியூச்சுவல் பண்ட் முதலீடு அதிகரிக்க காரணமாக கருதப்படுகிறது.மேலும், சராசரி முதலீட்டாளர் களில் பலர், எஸ்.ஐ.பி., வழியை நாடத் துவங்கியிருப்பதாகவும் கருதப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|