பிரிட்டனில் கால்பதிக்கும் ‘எம்பசிஸ்’ பிரிட்டனில் கால்பதிக்கும் ‘எம்பசிஸ்’ ... இந்தியாவில் 177வது விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது வெஸ்ட்ஸைட் இந்தியாவில் 177வது விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது வெஸ்ட்ஸைட் ...
ஐசிஐசிஐ வங்கியின் வணிகர்களுக்கான “மெர்ச்சண்ட் ஸ்டேக்” தளம் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2021
20:55

சில்லறை வணிகர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாட்டின் மிக விரிவான டிஜிட்டல் வங்கி சேவைகளின் தொகுப்பாக மெர்ச்சண்ட் ஸ்டேக் (வணிக அடுக்கு என்று பொருள்படக் கூடியது) என்ற தளத்தைத் தொடங்குவதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அறிவித்துள்ளது. இதன் டிஜிட்டல் வங்கி சேவை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் வணிகர்களுக்கு வழங்கப்படுகிறது.

மளிகை, சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய சில்லறை விற்பனைக் கடை சங்கிலிக் கட்டமைப்புகள், ஆன்லைன் வணிகங்கள் மற்றும் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் போன்றவை தங்கள் வங்கித் தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்ய இது உதவுகிறது. இந்த கோவிட் தொற்றுநோய்க் காலத்தின்போது சவாலான நேரங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனங்கள் தடையின்றி சேவை செய்ய முடியும்.

இந்த முன்முயற்சியானது, ஐசிஐசிஐ வங்கியின் ‘பாதுகாப்பு அக்கறையுடனான வணிகம்’ என்ற கொள்கையின் வெளிப்பாடாக அமைந்திருப்பதோடு நேரடி மனித தொடர்பில்லாமல் சில்லறை வணிகர்கள் இந்த சேவைகளைப் பெற முடியும் என்பதால் இந்த முன்முயற்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களில் பலர் முதல் முறை தொழில் புரிபவர்களாக உள்ளனர் வங்கியின் கிளைகளுக்குச் செல்லாமல், மக்கள் வீட்டிலேயே இருக்கவும் சமூக இடைவெளியைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்படும் இந்த நேரத்தில் இந்த முன்முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. வணிகங்களுக்கான ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் வங்கிச் செயலியான இன்ஸ்டா பிஸ் ஸில் இந்த வசதிகளை அவர்கள் உடனடியாகப் பெறலாம்.

இந்த சேவை அறிமுகம் குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மூத்த நிர்வாகி அனுப் பாக்சி கூறுகையில், “சுயதொழில் செய்பவர்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ எனப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவு இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்பதை நாங்கள் எப்போதும் உறுதியாக நம்புகிறோம். இந்தப் பிரிவின் பெரும்பகுதி சில்லறை வணிகர்களைக் கொண்டுள்ளது.

2020-ம் ஆண்டில் சுமார் 780 பில்லியன் அமெரிக்க டாலர் பரிவர்த்தனைகள் மதிப்புடன் நாட்டில் 2 கோடிக்கு மேற்பட்ட வணிகர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை வரும் ஆண்டுகளில் வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது தொற்றுநோய்களின் பரவல் அதிகரித்துவரும் இந்த கடினமான காலங்களில், எங்களது இந்த முயற்சியானது, டிஜிட்டல் வங்கி தளத்துடன் வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளைத் தொடர உதவுவதாக அமையும், இது அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய உதவும். அதனால் நாங்கள் இதற்காகவே ‘மெர்ச்சண்ட் ஸ்டேக்’ முன்முயற்சியை தொடங்கி இருக்கிறோம்.’ மிக முக்கியமாக நேரடி மனித தொடர்பு இல்லாத பல்வேறு வங்கி சேவைகளை இச்சேவை வழங்குகிறது. அதாவது வணிகர்களுக்கு மட்டுமின்றி அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் அவசியமான பாதுகாப்பை அளிக்கிறது. இந்த சேவையானது ‘ பாதுகாப்பு அக்கறையுடனான வணிகம்’ என்ற ஐசிஐசிஐ வங்கியின் வழிக்காட்டுதல் கொள்கையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது.. சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரே தளத்தில் அனைத்து டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குவதற்காக ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் தொடங்கிய ‘ஐ.சி.ஐ.சி.ஐ ஸ்டேக் என்ற சேவையின்’ தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)