ஐசிஐசிஐ வங்கியின் வணிகர்களுக்கான “மெர்ச்சண்ட் ஸ்டேக்” தளம் அறிமுகம்ஐசிஐசிஐ வங்கியின் வணிகர்களுக்கான “மெர்ச்சண்ட் ஸ்டேக்” தளம் அறிமுகம் ... ஸ்டெல்லாண்டிஸ் புதிய தலைமை நிர்வாகிகள்  நியமனம் ஸ்டெல்லாண்டிஸ் புதிய தலைமை நிர்வாகிகள் நியமனம் ...
இந்தியாவில் 177வது விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது வெஸ்ட்ஸைட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2021
20:59

டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான ட்ரெண்ட் லிமிடெட்டின் ஒரு அங்கமான வெஸ்ட்ஸைட், இந்தியாவில் 177-வது விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் மதுரையில் தொடங்கிய தனது புதிய பிராண்ட் ஷோரூம் மூலமாக அனைத்து பேஷன் ஆர்வலர்களிடமும் ஒரு வித்தியாசத்தை உருவாக்க முயற்சிக்கிறது. மதுரை, காளவாசல் சந்திப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஷோரும் பணியிடம், வார இறுதி கொண்டாட்டம், ஓய்வு நேரம் என அனைத்து தருணங்களுக்கும் ஏற்ற ஸ்டைலை எளிமையாக அதேநேரம் அழகியலுடன் அளிக்கும் வகையில் சிறப்பான ஆடையலங்காரத் தீர்வை வழங்குகிறது. பேஷனுக்கான நம்பிக்கையையும் மதிப்பையும் தரும் வகையில் ஆடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், பாதணிகள் என்று அனைத்தையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்கிறது.

தனித்துவமான, ஈடிணையற்ற அதிசிறந்த சில்லறை வர்த்தக அனுபவத்தை ஒரு விதிவிலக்கான மதிப்பில் நவீன மற்றும் சமகால பேஷன் பிராண்ட்களில் வழங்க வேண்டுமென்ற வெஸ்ட்ஸைட் பிராண்டின் நோக்கத்துடன் பொருந்தும் விதமாகப் புதிய விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது. தனது பிரத்யேகத் தொகுப்பினால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பேஷனை வெளிப்படுத்தும் புதிய முயற்சிகளோடு வெஸ்ட்ஸைட் வளர்கிறது. அனைத்து பெண்களும் மிகச்சிறந்த விலைகளில் தங்களுக்குப் பிடித்தமான பேஷன் பிராண்ட்களை திருப்தியுறும்வரை தேர்ந்தெடுக்கலாம்.

பார்ட்டி கலாசாரத்தை விரும்பும், பேஷன் மீது ஆர்வம் கொண்ட இளம்பெண்களுக்காகவே ’நியுஆன்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக உருவாக்கத்தில் ஈடுபடும் இளைய தலைமுறையைப் பிரதிபலிக்கிறது இந்த பிராண்ட். ஸ்மார்ட்டான, பெண்கள் சார்ந்த கேஷுவல்களை பார்க்க வேண்டுமா? நுட்பமானதாக, சட்டென்று கவரும் வகையில் இதற்குப் பதில் சொல்கிறது எல்.ஓ.வி. அனைத்து கட்டழகுப் பெண்களும் ஜியாவில் ஸ்மார்ட்டான, கேஷுவலான, வசதியான ஆடைத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கலாம். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நவநாகரிக, ஸ்டைலிஷான, அதிநவீன, நம்பிக்கையான, பணிக்கேற்ற ஆடைகளை தருகிறது வார்ட்ரோப். கேஷுவல், ப்யூஷன், இந்திய பாரம்பரிய ஆடைகள் என்று எதுவானாலும் இங்கு கிடைக்கும்.

ஸ்டூடியோ வெஸ்ட் இந்தியப் பெண்களுக்கான அழகுப் பொருட்கள் தொகுப்பைப் பிரத்யேகமாக வழங்குவது மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் அவற்றை அளிக்கிறது. குளுமையான, கடினமான, படைப்பாளுமைமிக்க, நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் வழக்கத்திலிருந்து மாறுபட்ட, உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிற, நவநாகரித்தை அளிக்கிற இதன் அழகுசாதனப் பிரிவானது அழகுசாதனப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், ஆடம்பரமான குளியல் மற்றும் உடலை அழகூட்டும் தயாரிப்புகள் என்று ஒரு விரிவான வரிசையைக் கொண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)