பதிவு செய்த நாள்
05 மே2021
21:10

மும்பை:கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல், முக்கிய பணிகள் தொடர்ந்து நடக்கும் வகையில், 250 பணியாளர்களுடன் கூடிய தனி மையம் ஒன்றை, ரிசர்வ் வங்கி நடத்தி வருவதாக தெரிவித்துஉள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே, அதுவும் அரசு முழு ஊரடங்கு சட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாகவே, கொரோனா தொற்றால் முக்கியமான பணிகள் பாதிக்காமல் இருக்க, போர்க்கால மையம் ஒன்றை அமைத்தது, ரிசர்வ் வங்கி.இங்கு பணியாற்றுபவர்கள் வீடுகளிலிருந்து விலகி, முழுமையாக மையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு, பணியாற்றி வருவதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
திடீரென பத்திரிகையாளர்கள் சந்திப்பை காணொலி வாயிலாக நடத்திய சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.இருப்பினும், இந்த மையம் எங்கு செயல்படுகிறது என்பது போன்ற தகவல்களை அவர் கூற மறுத்துவிட்டார்.
கடந்த ஆண்டு பெயர் குறிப்பிடாத ஓட்டலில் போர்க்கால மையம் நடைபெற்றது. இப்போது அதே இடத்தில் செயல்படுகிறதா என்ற கேள்விக்கும்அவர் பதிலளிக்கவில்லை. ரிசர்வ் வங்கி மும்பையை தலைமையகமாக கொண்டு, 31 பிராந்திய அலுவலகங்களுடனும், 14 ஆயிரம் ஊழியர்களுடனும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|