பதிவு செய்த நாள்
07 மே2021
18:38

புதுடில்லி:கொரோனா இரண்டாவது அலை காரணமாக, கடந்த ஏப்ரலில், உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பரவலை தடுக்க, பல மாநில அரசுகள் பயணியர் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. இதன் காரணமாக, ஏப்ரலில், உள்நாட்டு விமான சேவையில், பயணியர் எண்ணிக்கை, 29 சதவீதம் குறைந்து, 55 – 56 லட்சம் என்ற அளவில் சரிவடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, மார்ச்சில், 78 லட்சமாக இருந்தது.
கடந்த, 2020 செப்டம்பருக்கு பின், முதன் முறையாக, நடப்பு மே, 3ம் தேதி உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, 1 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. ஏப்ரலில், தினசரி விமான சேவை, 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இது, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், தலா, 2 ஆயிரத்து, 300 ஆக இருந்தது. இதே காலத்தில், விமான பயணியர் எண்ணிக்கை, சராசரியாக, 109லிருந்து, 93 ஆக குறைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, பல மாநிலங்கள் ஊரடங்கு அறிவித்துள்ளதால், உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை மேலும் குறையும். இதனால், விமான நிறுவனங்களின் வருவாய் மேலும் பாதிக்கப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|