பதிவு செய்த நாள்
13 மே2021
21:30

புதுடில்லி:இந்தியாவில், ‘5ஜி’ அலைக்கற்றை சேவை துவக்கப்பட்டால், முதல் ஆண்டில் மட்டுமே, 4 கோடி பேர், இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என, தொலைத் தொடர்பு துறை நிறுவனமான, ‘எரிக்சன்’ தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த சேவையை, ‘டிஜிட்டல்’ சேவைகளுடன் வழங்கும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் கூடுதலாக, 50 சதவீத கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிறார்கள் என்றும்; வெறும் 5ஜி இணைப்பு எனில், 10 சதவீதம் அளவுக்கே கூடுதலாக செலுத்த விரும்புவதாகவும், எரிக்சன் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், 5ஜி சேவை குறித்து, 26 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, தரவுகளை சேகரித்துள்ளது, எரிக்சன் நிறுவனம். அதில், உலகின் பல நாடுகள், டிஜிட்டல் சேவைகளுடன் கூடிய, 5ஜி இணைப்புக்கு, 20 – 30 சதவீதம் கூடுதல் கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.இந்தியாவில், 5ஜி ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் ஏற்கனவே விற்பனை செய்து வருகின்றன.
இந்நிலையில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், முதல் ஆண்டில் மட்டும், 4 கோடி ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் இந்த சேவையை பெற தயாராக உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கையில், 5ஜி போனை வைத்துக் கொண்டு, 4ஜி சேவை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை, ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையில், 22 சதவீதமாக இருக்கிறது என்கிறது, எரிக்சன் அறிக்கை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|