பதிவு செய்த நாள்
14 மே2021
20:38

புதுடில்லி:கொரோனா இரண்டாவது அலை பரவிஇருக்கும் நிலையில், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு, இலவச அழைப்புகளுக்கான சலுகையை அறிவித்துள்ளது.
இதற்காக இந்நிறுவனம், ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து, இந்த திட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின்படி, கொரோனா காலத்தில் ‘ரீசார்ஜ்’ செய்ய இயலாதவர்கள், இந்த சலுகையை பயன்படுத்தி தொடர்பில் இருக்க முடியும் என்று, ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்காக இரு சலுகை திட்டங்களை, ஜியோ அறிவித்து உள்ளது.
இதன்படி, கொரோனா காலம் முடியும் வரை, ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும், 300 நிமிடங்கள் இலவசமாக அழைப்பு களை மேற்கொள்ள முடியும். அதாவது, நாள் ஒன்றுக்கு 10 நிமிடங்கள் வீதம்.இந்த இலவச அழைப்பு சலுகை தவிர, கூடுதலாக, ஜியோ வாடிக்கையாளர்கள் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்தை வாங்கினாலும், கூடுதலாக அதே மதிப்பிலான திட்டம் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த சலுகை திட்டம் வருடாந்திர மற்றும் ஜியோபோன் சாதனத்துடன் கூடிய திட்டங்களுக்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|