மருத்துவ காப்பீடு பாலிசியில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் மருத்துவ காப்பீடு பாலிசியில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் ... கோவிட் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் இந்துஜா குழுமம் கோவிட் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் இந்துஜா குழுமம் ...
ஆயிரம் சந்தேகங்கள் !சிறு வங்கிகளில் பணத்தை வைக்கலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2021
00:02

என் கிரெடிட் கார்டு தொகையை ஒழுங்காக கட்டிக்கொண்டு வருகிறேன். ஆனால், என்னுடைய சிபில் ஸ்கோரில், நான் ஏதோ கடன் கட்டத் தவறியவன் என்பது மாதிரியே காண்பித்து வருகிறதே, என்ன செய்யட்டும்?

ஈஸ்வரமூர்த்தி, ஒரத்தநாடு.

பொதுவாக கிரெடிட் கார்டு தொகையைச் செலுத்துபோது, அதை ரவுண்ட் ஆப் செய்து செலுத்துவோம். உதாரணமாக, 1580.56 ரூபாய் என்று கட்டவேண்டிய தொகை இருக்குமானால், 1,580 ரூபாய் மட்டும் செலுத்துவோம். இங்கே, 56 காசுகளை நீங்கள் செலுத்தவில்லை என்பதைக் கவனிக்கவும்.

வங்கியில் இருக்கும் மென்பொருள், நீங்கள் கட்டவேண்டிய கடனை முழுமையாகச் செலுத்த வில்லை என்று தான், கிரெடிட் பீரோ அமைப்புக்குத் தெரிவிக்கும். அதனால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் அடிவாங்கும். எப்போதும், சற்று கூடுதலாகச் செலுத்திவிடுவது நல்லது.

ஒரு சில ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில், சேமிப்புக் கணக்குகளுக்கே, 6.75 முதல் 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறதே. இவற்றில் பணத்தை வைத்திருக்கலாமா?

கீதா ஆராவமுதன், பெங்களூரு.

இரண்டு உத்திகளை ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் பின்பற்றுகின்றன. மிக அதிக தொகையை சேமிப்புக் கணக்குகளில் இருப்பு வைத்தால் தான் இத்தகைய வட்டி கிடைக்கும். உதாரணமாக, ஒரு வங்கி, 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தால், 7 சதவீதம் வட்டி கொடுக்கிறது. இன்னொரு வங்கியோ, 50 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு வைத்திருந்தால், 6.25 சதவீதம் வட்டி கொடுக்கும். இதுவும் ‘இன்க்ரிமென்டல் வட்டி’தான்.

அதாவது, 0 முதல் 1 லட்சம் ரூபாய் வரையுள்ள தொகைக்கு 3 சதவீதம், 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரைஉள்ள தொகைக்கு 6 சதவீதமும், 10 லட்சம் முதல் 50 கோடி ரூபாய் வரையுள்ள தொகைக்கு, 6.50 சதவீதமும், 50 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதற்கு மட்டும் 6.75 சதவீத வட்டியும் வழங்கப்படும்.

ஏதேனும் பெரிய தொகை வந்து, அடுத்த முதலீட்டைச் செய்வதற்குக் காத்திருக்கும் காலத்தில், இத்தகைய ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் இருப்பு வைத்திருந்தால், வழக்கத்தை விட சற்றே கூடுதலான வட்டி கிடைக்கலாம்.

முறையான பிளான் அனுமதியோடு 2010இல் நான் 735 ச.அடி. ஃப்ளாட் வாங்கினேன். இப்போது அதை விற்கப் போகும்போது, வாங்குபவர் நிலத்துக்கான பட்டா கேட்கிறார். பட்டா அவசியமா? இப்போது விண்ணப்பித்தால் பட்டா கிடைக்குமா?

ஜி.எஸ். கிரி, இ–மெயில்.

ஆம், பட்டா இல்லாமல் தற்போது எந்த நிலத்தையும் விற்பனை செய்ய முடியாது. வாங்கவும் கூடாது. விண்ணபிக்கலாம். சற்று அலைய வேண்டியிருக்கும். தாமதம் ஆகலாம். ஆனால், பட்டா கிடைக்கும்.

நான், 75 வயது கேன்சர் நோயாளி. என் நோய்க்கான மருத்துகள் மிக அதிக விலையில் இருப்பதால், என மகள் அமெரிக்காவில் இருந்து ஒவ்வொரு மாதமும், 1.65 லட்சம் ரூபாய் அனுப்பி வருகிறார். என மொத்த ஆண்டு வருவாய், 5 லட்சத்தைத் தாண்டிவிட்டது. நான் என் மகளிடம் இருந்து ஏதேனும் டிக்ளரேஷன் வாங்க வேண்டுமா? வருமான வரி செலுத்த வேண்டுமா?

பி. ராமசாமி, இ – மெயில்.

வருமான வரிச் சட்டம் 56 (2) பிரிவின் படி மகன் அல்லது மகளிடம் இருந்து பரிசாகப் பெறும் எந்தத் தொகைக்கும் வருமான வரி இல்லை. உங்கள் மகள் உங்களுக்கு அனுப்பும் தொகைக்கு வரி செலுத்த வேண்டாம். அந்தத் தொகையின் மூலம் உங்களுக்கு ஏதேனும் வட்டி கிடைக்குமானால், வருமான வரிச் சட்டம் 64ன் படி, அந்தத் தொகை உங்களது மொத்த வருவாயோடு சேர்க்கப்பட்டு, அது வருமான வரி விலக்கு அடுக்குக்கு மேல் இருக்குமானால், அப்போது வரி செலுத்த வேண்டியிருக்கலாம்.


வங்கிக் கணக்கில் இருந்து ஓராண்டில், ரொக்கமாக 20 லட்சம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். எனக்கு இரண்டு வங்கிக் கணக்குகள் உள்ளன. ஒவ்வொரு வங்கிக் கணக்கில் இருந்தும் 20 லட்சம் ரூபாய் எடுக்கலாமா? அல்லது மொத்தமாகவே 20 லட்சம் தானா?

ரஜினி, திருவள்ளூர்.

வருமான வரிச் சட்டம், பிரிவு 194 என் படி, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து ‘மொத்தமாக’ (aggregate) பணம் எடுத்தால், டி.டி.எஸ்., விதிக்கச் சொல்கிறது. அதுவும், அவர் அதற்கு முந்தைய மூன்றாண்டுகளில், வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் தான், டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்பட வேண்டும். அதனால், நீங்கள் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்திருந்தாலும், ஓராண்டில் மொத்தமாக, 20 லட்சம் ரூபாய் வரைக்கும் ரொக்கமாக பணம் எடுக்கலாம்.

நான் ஐ.ஓ.பி., காசோலையில், 70 ஆயிரம் ரூபாய் என எழுதி ஒருவருக்குக் கொடுத்தேன். அவர் அதை யூனியன்வங்கியில் டெபாசிட் செய்தார். ஆனால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காசோலை கொடுத்தால், வங்கிக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று அக் காசோலையைத் திருப்பிவிட்டது, ஐ.ஓ.பி., அப்படி ஒரு விதி உண்டா? உண்டெனில் தொலைபேசி மூலம் சொன்னால் போதுமா?

ச.ச.குமார், திருவள்ளூர்.

ஆம், உண்டு. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கும் புதிய நடைமுறைக்கு, ‘பாசிடிவ் பே சிஸ்டம்’ என்று பெயர். மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காசோலை கொடுத்தால், உங்கள் வங்கிக் கணக்கு எண், காசோலை எண், தேதி, தொகை, டிரான்சாக்‌ஷன் கோடு, எம்.ஐ.சி.ஆர்., கோடு, பெறுபவரது பெயர் ஆகிய விவரங்களை இணையசேவை மூலமோ, வங்கியின் அலைபேசி செயலி மூலமோ வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், வங்கியின் வலைத்தளத்தில் இதற்கென்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் தெரிவிக்க வேண்டும்.

ஐ.ஓ.பி.,க்கு (https://iobnet.org:5444/POSPAY/jsp/sbacdata.jsp) என்ற சுட்டியில் போய் தெரிவிக்கலாம். உங்கள் பணம் திருடு போகாமல் இருப்பதற்குப் போடப்பட்டுள்ள பாதுகாப்பு பூட்டு இது.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, இ-மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com

9841053881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)