பதிவு செய்த நாள்
22 மே2021
19:06

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த, ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., அதன் வசம் இருக்கும் 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா'வின் பங்குகளை, 5 சதவீதமாக அதிகரித்துக் கொண்டுள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தின் வசம், இதற்கு முன், 3.09 சதவீதம் அளவுக்கு, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் பங்கு இருந்தது. அதாவது கிட்டத்தட்ட, 19.79 கோடி பங்குகளை வைத்திருந்தது. இந்நிலையில், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தகுதி வாய்ந்த நிறுவன ஒதுக்கீட்டின் அடிப்படையில். தற்போது, 14.78 கோடி பங்குகளை எல்.ஐ.சி., வாங்கியது.
இதனையடுத்து, இதன் கைவசம் இருக்கும் பங்குகள் அளவு, 5.06 சதவீதமாக அதிகரித்து உள்ளது. எண்ணிக்கை அளவில், மொத்தம், 34.57 கோடி பங்குகளாக உயர்ந்துள்ளது.கடந்த வியாழக்கிழமையன்று, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, தகுதி வாய்ந்த நிறுவன ஒதுக்கீடு வாயிலாக 1,447 கோடி ரூபாயை திரட்டியுள்ளதாக தெரிவித்திருந்தது.எல்.ஐ.சி., நிறுவனம் இத்தகைய பங்கு முதலீடுகள் வாயிலாகவும், வருமானத்தினை அதிகரித்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|