பதிவு செய்த நாள்
22 மே2021
19:14

புதுடில்லி:நடப்பு காலாண்டில், நாட்டின் முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை குறைவதற்கான வாய்ப்பிருப்பதாகவும், அடுத்த காலாண்டில் தேவைகள் அதிகரிக்கும் என்றும், ரியல் எஸ்டேட் தளமான, ‘பிராப்டைகர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி மணி ரங்கராஜன் கூறியதாவது:நாட்டின் முக்கியமான எட்டு நகரங்களில், ஜூன் காலாண்டில், இரண்டாவது அலை காரணமாக விற்பனை சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், நடப்பு ஆண்டின் பிற்பகுதியில், தேவை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில், வீடுகள் விற்பனை, 19 ஆயிரத்து, 38 ஆக குறைந்து போனது. அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், விற்பனை, 92 ஆயிரத்து, 764 ஆக இருந்தது. கடந்த ஆண்டு சரிவுக்கும் கொரோனாவே காரணமாக அமைந்தது.இம்முறை எவ்வளவு வீழ்ச்சி இருக்கும் என்பதை இப்போதே முடிவு செய்துவிட முடியாது.
டில்லி தலைநகர் பிராந்தியம் மிகவும் கடுமையான விற்பனை பாதிப்பை சந்தித்துள்ளது. இவ்வாறு கூறினார்.இவை ஒருபுறமிருக்க, நிறுவனங்கள் தங்கள் கைவசம் தேங்கி இருக்கும் இருப்புகளை விற்பனை செய்வதற்கு, 3_5 ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என்கிறார்கள்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|