பதிவு செய்த நாள்
27 மே2021
19:36

லாஜிடெக் நிறுவனம் எம்கே சைலண்ட் வயர்லெஸ் காம்போ என்ற பெயரில் 90% குறைந்த ஒலியுடன் வழக்கமான தட்டச்சு மற்றும் க்ளிக்கிங்க் அனுபவத்தைத் தரும் காம்போவை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அமைதியான ஒலியை அனுபவிக்கலாம்.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீடித்த உழைப்பையும், வசதியையும் கொண்ட புதிய கீபோர்ட் மற்றும் மௌஸ் காம்போ சைலண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தட்டச்சு மற்றும் க்ளிக்கிங்-ன் போது ஏற்படும் சத்தத்தைக் குறைக்கிறது. ரூ.2995/- விலைக்கு அமேசான்.இன் தளத்தில் கிடைக்கும் லாஜிடெக் எம்கே 295 சைலண்ட் வயர்லெஸ் காம்போ உடன் எங்கும் வேண்டுமானாலும் அமைதியாகப் பணியாற்றலாம்.
36 மாத கீபோர்ட் மற்றும் 18 மாத மௌஸ் பேட்டரி ஆயுள் வாரண்டி கொண்ட எம்கே 295 சைலண்ட் வயர்லெஸ் காம்போவுடன் அமைதியாக நீண்ட காலம் பணியாற்றலாம். ஹாண்டி ஆன் அண்ட் ஆஃப் சுவிட்ஸ்களுடன் அடிக்கடி பேட்டரிக்களை மாற்றும் தொல்லையும் இல்லை. கிராபைட் மற்றும் ஆப் வொயிட்-இல் வரும் இந்த ஆற்றல்மிகு ஜோடி 10மீ சுற்றளவுக்கு தடையற்ற வயர்லெஸ் அம்சத்துடன் சிறிய யுஎஸ்பி ரிசீவருடன் இணைக்கப்பட்டுள்ளதால் உங்கள் மேசையில் அதிக இடம் கிடைப்பதுடன் தொடர்ந்து கவனச் சிதறலையும் குறைக்கும். முழு அளவிலான வசதியான கீபோர்ட் எட்டு சுலபமான ஷார்ட்கட்கள் மற்றும் எளிதாக இயக்க முழுமையான நம்பர் பேட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் வளைவுகளும், ஏற்ற இறக்கங்களும் உள்ள கையடக்க மௌஸ் அமைதியான, மிருதுவான, துல்லியமான க்ளிக்கிங்கையும், பாயிண்டிங்கையும் அளிக்கும், என்று குறிப்பிட்டப் பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|