பதிவு செய்த நாள்
27 மே2021
20:53

புதுடில்லி:விலை குறைந்த ஸ்மார்ட்போனை தயாரிக்கும் முயற்சியில், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம், ‘ஜியோ பிளாட்பார்ம்’ நிறுவனத்தில், 7.7 சதவீத பங்குகளை, 33 ஆயிரத்து, 737 கோடி ரூபாயில் வாங்கியது. அத்துடன், ‘ஜியோ’வுடன் இணைந்து, துவக்க நிலை ஸ்மார்ட்போனை, குறைந்த விலையில் தயாரிப்பதற்காக ஒப்பந்தமும் செய்து கொண்டது.
இந்நிலையில் சுந்தர் பிச்சை, காணொலி ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசியபோது, மலிவு விலை போன் தயாரிப்பு முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்து உள்ளார். இருப்பினும் போனின் விலை, அறிமுக நாள் உள்ளிட்ட வேறு எந்த தகவல்களையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
விலையிலான போன், அத்துடன் சகாய விலையில் இன்டர்நெட்டுடன் இணைப்பு ஆகியவற்றை வழங்குவதன் வாயிலாக, நாட்டில் இருக்கும் அனைவருக்கும் இணைய சேவை எளிதாக கிடைக்கும் என, இவ்விரு நிறுவனங்களும் கருதுகின்றன.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|