பதிவு செய்த நாள்
29 மே2021
19:50

புதுடில்லி:கொரோனா இரண்டாவது அலை காரணமாக, குளிர்பான நிறுவனங்களின் வருவாய் மீட்சி காண்பது தடைபட்டுள்ளதாக, ‘கிரிசில் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, குளிர்பானங்களின் விற்பனை, கோடை காலத்தில் தான் அதிகமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, கோடை கால விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.கடந்த நிதியாண்டில், கோடை காலத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளால், வருவாய், ஐந்தில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டிலும் கோடையில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில், கொரோனாவுக்கு முந்தைய காலகட்ட விற்பனையைவிட, 10 சதவீதம் குறையக்கூடும்.நாட்டின் குளிர்பான சந்தையில், 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பு, கோக கோலா, பெப்சி ஆகிய நிறுவனங்களின் வசம் உள்ளது.
பொதுவாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், அதிகளவில் குளிர்பானங்கள் விற்பனை நடைபெறும். தற்போதைய நிலையில், இரண்டாவது காலாண்டிலிருந்து தான் விற்பனை மீண்டும் அதிகரிக்க துவங்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|