பதிவு செய்த நாள்
29 மே2021
19:56

சென்னை:கடந்த, 2020 – -21ம் நிதியாண்டில், கே.வி.பி., எனும், கரூர் வைசியா வங்கியின் நிகர லாபம், 52.76 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 359 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 2020 – 21ம் நிதியாண்டில், வங்கியின் மொத்த வணிகம், 7.91 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில், 1.08 கோடி ரூபாயாக இருந்தது. வங்கி வழங்கிய மொத்தக் கடன் அளவு, 8.87 சதவீதம் உயர்ந்து, 52 ஆயிரத்து 820 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டில், 48 ஆயிரத்து 516 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் வைப்புத் தொகை, 7 சதவீதம் அதிகரித்து, 63 ஆயிரத்து 278 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கியின் நிகர லாபம், 52.76 சதவீதம் அதிகரித்து, 359 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டில், 235 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் நிகர வாராக் கடன், 3.92 சதவீதத்திலிருந்து, 3.41 சதவீதமாக குறைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|