பதிவு செய்த நாள்
29 மே2021
20:01

புதுடில்லி:வீட்டுக்கடனை பொறுத்தவரை, 10 ஆண்டுகளுக்குள்ளாக கடனை திருப்பிச் செலுத்தும் திட்டத்தையே அதிகம் பேர் விரும்புவதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது.
வீட்டுக்கடனுக்கான வட்டி குறைந்துள்ள நிலையில், கடனை விரைவாக கட்டி முடிக்கவே வாடிக்கையாளர்கள் விரும்புவதாகவும் ஆய்வில் தெரியவந்து உள்ளது.ரியல் எஸ்டேட் ஆன்லைன் தளமான, ‘மேஜிக்பிரிக்’ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுக்க மேற்கொண்ட இந்த ஆய்வில், 26 சதவீதம் பேர் தங்களுடைய வீட்டுக்கடனுக்கான தவணை காலம், 10 ஆண்டுகளுக்குள்ளாக இருப்பதையே விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.அடுத்து, 10 முதல், 15 ஆண்டு கால தவணை திட்டத்தை, 25 சதவீதம் பேர் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 15 முதல், 20 ஆண்டு கால திட்டத்தை, 23 சதவீதம் பேர் விரும்புகிறார்கள்.
மேலும், 16 சதவீதம் பேர், 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திட்டத்தில், வீட்டுக்கடன் வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.தற்போது வீட்டுக்கடனுக்கான வட்டி, 6.65 – 6.90 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துவிட்ட காரணத்தால், விரைவாக கடனை அடைத்துவிடும் பொருட்டு, குறைவான கால அளவிலான திட்டத்தையே அதிகம் பேர் விரும்புகிறார்கள். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|