பதிவு செய்த நாள்
29 மே2021
20:03

மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் சைக்கிள் தயாரிப்பு துறை, கடந்த, 10 ஆண்டுகளில் காணாத வகையில், 20 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த நிதியாண்டில், 1.2 கோடி சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் விற்பனை, 1.45 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியா, சைக்கிள் உற்பத்தியில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ‘ஸ்டாண்டர்டு, பிரீமியம், கிட்ஸ், எக்ஸ்போர்ட்’ என, நான்கு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.சைக்கிளுக்கான தேவையில் பெரும்பகுதி, அரசின் நலத்திட்டங்கள் அடிப்படையில் பெறப்படுவதாகும்.
கடந்த ஆண்டு விற்பனையில் பாதியளவு, அரசாங்க திட்டங்களுக்காக விற்பனை செய்யப் பட்டதாகும்.சைக்கிள் உற்பத்தியில், 40 சதவீதம், பிரீமியம் மற்றும் குழந்தைகளுக்கான தாகும். 10 சதவீதம் ஏற்றுமதி ஆகிறது.கொரோனா பாதிப்பின் காரணமாக, உடலை தகுதிவாய்ந்ததாக வைத்துக்கொள்ள பலரும் விரும்புவதை அடுத்து, சைக்கிளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், ஊரடங்கு போன்றவற்றால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் அரசாங்கங்கள் வாங்குவதும் குறைந்தது.தற்போதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பினும், அவை நீக்கப்பட்டு, விற்பனையகங்கள் மீண்டும் செயல்படத் துவங்கியதும், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|