பதிவு செய்த நாள்
05 ஜூன்2021
19:44

புதுடில்லி:ஜப்பானை சேர்ந்த, ‘சாப்ட்பேங்க்’ குழுமம், ‘வால்மார்ட்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில், 3,650 – 4,380 கோடி ரூபாயை முதலீடு செய்வது குறித்து பேச்சு நடத்தி வருகிறது.
இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குதாரராக, மீண்டும் சாப்ட்பேங்க் நுழையும். கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன், சாப்ட்பேங்க் தன்வசம் இருந்த பிளிப்கார்ட் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இருப்பினும், சாப்ட்பேங்க் மற்றும் பிளிப்கார்ட் தரப்பில் இருந்து, இந்த பேச்சு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, பிளிப்கார்ட் நிறுவனம் அடுத்த ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது குறித்த முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.தற்போதைய கொரோனா காலத்தில், பிளிப்கார்ட் குறிப்பிடத்தக்க வணிக வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதன் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, இந்நிறுவனத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
, சாப்ட்பேங்க் நிறுவனம், அண்மைக் காலமாகவே இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.‘பேடிஎம், ஓலா’ போன்ற நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான முதலீட்டை ஏற்கனவே மேற்கொண்டு இருக்கிறது, சாப்ட்பேங்க்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|