ஒவ்வொரு மாதமும் 13 லட்சம் புதிய ‘டீமேட்’ கணக்குகள் ஒவ்வொரு மாதமும் 13 லட்சம் புதிய ‘டீமேட்’ கணக்குகள் ...  திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் இயங்க துவங்கின திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் இயங்க துவங்கின ...
பங்குச் சந்தைகள் புதிய சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2021
04:43

மும்பை : நேற்று வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகள் புதிய உயரங்களை தொட்டன.

கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மற்றும் பல மாநிலங்களில் தளர்வுகளை அறிவித்து வருவது ஆகிய காரணங்களால் சந்தை உயர்ந்துள்ளது. தளர்வுகள் அதிகரித்து; பாதிப்புகள் குறைந்து வருவதால், பொருளாதாரம் மீட்சியடையும் என்ற நம்பிக்கை, சந்தை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.மேலும் தனியார் வங்கிகள், வாகன துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் விலை அதிகரித்ததும், சந்தை சாதனை படைக்க உதவிகரமாக அமைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ நேற்றைய வர்த்தகத்தில், 228 புள்ளிகள் அதிகரித்து, 52,328 புள்ளிகளை தொட்டு, புதிய சாதனை படைத்தது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 81.40 புள்ளிகள் உயர்ந்து, 15,751 புள்ளிகளை எட்டி சாதனை படைத்துள்ளது. ‘சென்செக்ஸ்’ பிரிவில், பவர்கிரிட் விலை அதிகளவில் ஏற்றம் கண்டது. இப்பங்கு விலை கிட்டத்தட்ட, 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.இதையடுத்து, ‘என்.டி.பி.சி., டெக் மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ ஆகிய நிறுவன பங்குகளும் விலை அதிகரித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)