அதிகரிக்கும் மின் நுகர்வு மீட்சி காணும் பொருளாதாரம் அதிகரிக்கும் மின் நுகர்வு மீட்சி காணும் பொருளாதாரம் ...  நாட்டின் ஏற்றுமதி 52.39 சதவீதம் அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி 52.39 சதவீதம் அதிகரிப்பு ...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2021
20:51

வாஷிங்டன்:உலக வங்கி நடப்பு 2021ம் ஆண்டில், இந்தியா, 8.3 சதவீத வளர்ச்சியை காணும் என கணித்து அறிவித்துள்ளது.மேலும் 2022ல், 7.5 சதவீத வளர்ச்சி காணும் என்றும் தெரிவித்துஉள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:தொற்று நோய் துவங்கியதிலிருந்து, எந்த நாட்டில் பாதிப்பு ஏற்பட்டாலும், அது இந்தியாவின் மீட்சியை தடுப்பதாகவே அமைந்துள்ளது.கடந்த, 2020ல் இந்தியாவின் பொருளாதாரம், மைனஸ் 7.3 சதவீதமாக சுருங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே 2019ல், வளர்ச்சி, 4 சதவீதமாக இருந்தது. 2023ல் இந்தியா, 6.5 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.உலக பொருளாதாரத்தை பொறுத்தவரை, கடந்த, 80 ஆண்டுகளில் இல்லாதவாறு பாதிக்கப்பட்ட நிலையில், 2021ல், 5.6 சதவீத வளர்ச்சியை காணும்.

கொள்கை மாற்றம்

இந்தியாவில், சேவைகள் மற்றும் உற்பத்தியில் எதிர்பார்த்ததை விட வலுவான மீட்சி மற்றும் உள்கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு, சுகாதாரத்துக்கான அதிக செலவு உள்ளிட்ட கொள்கை ஆதரவுகளால், பொருளாதார செயல்பாடு பயனடைந்துஉள்ளது. கொரோனா பரவலால் நுகர்வு, முதலீடு, நம்பிக்கை ஆகியவை குறைந்து, வணிகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.இதனால், 2022 – 23ம் நிதியாண்டில் வளர்ச்சி வேகம் குறைந்து, 7.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கடந்த பட்ஜெட் அறிக்கை, குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தை கொண்டுள்ளது.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)