நாட்டின் ஏற்றுமதி 52.39 சதவீதம் அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி 52.39 சதவீதம் அதிகரிப்பு ...  உணவு வணிகங்களுக்கு  புதிய கட்டுப்பாடு உணவு வணிகங்களுக்கு புதிய கட்டுப்பாடு ...
விவசாய பொருட்கள் ஏற்றுமதி 17.34 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
20:32

புதுடில்லி:நாட்டின் விவசாயம் மற்றும் அது சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், 17.34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நிதியாண்டில், 3.01 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள், கோதுமை, தினை, மக்காச்சோளம் மற்றும் பிற தானியங்கள் போன்றவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு நாடுகள், வியட்னாம், இந்தோனேஷியா, மலேஷியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில் முதன் முறையாக, பல்வேறு புதிய பகுதிகளிலிருந்தும் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. உத்தர பிரதேசம் வாரணாசியிலிருந்து காய்கறிகள், மாம்பழம் ஆகியவையும்; சந்தாலியிலிருந்து கறுப்பு அரிசியும் ஏற்றுமதி ஆகியுள்ளது.

கடல் மற்றும் தோட்ட பொருட்கள் அல்லாத விவசாய பொருட்களின் ஏற்றுமதி மட்டும், 28.36 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்த ஏற்றுமதி வளர்ச்சி போக்கானது, நடப்பு நிதி ஆண்டிலும் தொடர வாய்ப்பிருப்பதாக விவசாய துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்திய தயாரிப்புகளுக்கான புதிய சந்தைகளை பெறுவதற்காக, வேளாண்மை துறையுடன் இணைந்து, மத்திய வர்த்தக துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:நடப்பு மாதம், 14ம் தேதி வரையிலான இரண்டு வாரங்களில், நாட்டின் ஏற்றுமதி, 46.43 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், 619 கோடி ரூபாய் மதிப்பிலான வாழைப்பழ ஏற்றுமதி நடைபெற்றுள்ளதாக, மத்திய வர்த்தக ... மேலும்
business news
புதுடில்லி:முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், ‘கூகுள்’ நிறுவனத்துடன் இணைந்து, மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களை ... மேலும்
business news
புதுடில்லி:அண்மையில், மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், மானிய திட்டமான, ‘பேம் ... மேலும்
business news
வேகமாக வளர்ந்து வரும் சிறு வணிகங்களுக்கும், நன்கு நிறுவப்பட்ட பெரிய நிறுவனங்களுக்கும் இடையில், ஒரு இனிப்பான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)