பதிவு செய்த நாள்
18 ஜூன்2021
22:42

புதுடில்லி:‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் தயாரிப்புகளில் ஒன்றான, ‘மாருதி இகோ ஆம்புலன்ஸ்’ விலையில், 88 ஆயிரம்ரூபாய் குறைத்து அறிவித்துள்ளது.
இத்தகைய வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.,விகிதம் குறைக்கப்பட்டதை அடுத்து, இந்த விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.இகோ ஆம்புலன்சுக்கான ஜி.எஸ்.டி., விகிதம் 28 சதவீதமாக இருந்த நிலையில், அண்மையில்இது 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, தலைநகர் டில்லியில் இந்த ஆம்புலன்ஸ் விலை, 6.17 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டிருப்பதாக, மாருதி தெரிவித்துள்ளது.இந்த விலை குறைப்பு, ஜூன் 14 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும், இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 14ம் தேதியன்று, மத்திய நிதியமைச்சகம், கொரோனா தொற்று சம்பந்தமான பல பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைத்து அறிவித்தது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|